புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 09, 2023)

தண்ணீர் தேங்கிய குட்டை

2 கொரிந்தியர் 8:13

மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.


மழை நாட்களிலே ஒடும் நதியின் நீர்மட்டம் உயர்ந்ததால், தண்ணீர் புரண்டு, நதிக்கு அருகிலுள்ள குட்டைகளை நிரப்பியது. மழை ஓய்ந்து, நதிக்கும் அந்த குட்டைகளுக்கும் உள்ள தொடர்பு அற்றுப் போனதால், குட்டைகளிலே தண்ணீர் தேங்கி நின்றது. நாட்கள் செல்லும் போது, அந்த தண்ணீர் மாசுபட ஆரம்பித்து, சேறும், சகிதியும், அழுக்கு நிறைந்ததுமாக குட்டைகளிலே நாற்றம் எடுத்தது. ஆனால் ஓடும் நதியிலோவென்றால் எப்போதும் சுத்தமான, தெளிவான உபயோகத்திற்கு ஏற்ற தண்ணீர் இருந்தது. இந்த உலக த்திலே சில மனிதர்கள் பொருட் களை பெருக்கி தங்களுக்கென்று சேர்த்து வைக்கின்றார்கள். தாங்கள் உண்டு, குடித்து, உல்லாசமாக, இடா ம்பீகரமான மாளிகைகளிலே வாழ்கி ன்றார்கள். தாங்கள்மாத்திரம் தேசத் தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகு மட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டு கிறார்கள் (ஏசாயா 5:8). ஓடும் நதி, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடின்றி யாவருக்கும் பலன் கொடுக்கின்றது. ஆனால் மிகையாக தங்களுக்கென்று சேர்த்து வைக்கின்றவர்களின் செல்வம் ஏழைகளின் வாழ்விற்கு ஆதரவை வழங்குவதில்லை. மாறாக குட்டையிலே தேங்கி நிற்கும் தண்ணீரைப் போல, அந்த ஐசுவரியம் அவர்களுக்கு மட்டுமே சேர்த்து வைக்கப்படுகின்றது. காலப்போக்கிலே, அந்த ஐசுவரியம் இந்த உலகத்தின் போக்கின்படி அவர்களுக்கு பெயரையும், புகழையும் வழக்கினாலும், அது அவர்களுடைய வாழ்க்கையிலும், அவர்களுடைய சந்ததியினருடைய வாழ்க்கையிலும் அழுக்கையும், நாற்றத்தையும் ஏற்படுத்தும். பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவ தில்லை. செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவ தில்லை (பிரசங்கி 5:10). தேவ ஜனங்கள் வனாந்திரத்திலே மோசேயோடு இருந்த நாட்களிலே, வானத்திலிந்து மன்னா அவர்களுக்கு போஜனமாக கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தனது தேவையின் அளவின்படி சேர்க்க வேண்டும். அதிகமாய் சேர்த்தவைகள் மறுநாளிலே நாற்றமெ டுத்தது. எனவே, சமநிலைப் பிரமாணத்தின்படியே, வருங்காலத்திலே வறுமைப்பட்டவர்களின் செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக. சுத்தமான, தெளிந்த, நதியை போல உங்கள் வாழ்க்கை ஏற்றதாய் காணப்படுவதாக.

ஜெபம்:

ஆலோசனையில் ஆச்சரியமான தேவனே, ஐசுவரியத்தின் மயக்கத்தினால் நான் என் இருதயத்தை கெடுத்துக் கொள்ளாதபடிக்கு உம்முடைய ஆலோசனையின்படி நடக்கும்படி எனக்கி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 62:10