புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 08, 2023)

தேவன் தெரிந்து கொண்ட பாத்திரம்

அப்போஸ்தலர் 9:15

என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.


ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவ னைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கேயும் உம்மு டைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்று சவுல் என்னும் மனிதனைக் குறித்து அனனியா கர்த்தரிடம் கூறினான். ஏனெ னில் சவுல் வீடுகள்தோறும் நுழை ந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக் கொண்டிருந்தான் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. சவுல் கிறி ஸ்தவர்களை சிறைப்பிடிக்கும்படி, யூதமதத்தின் பிரதான ஆசாரியரின் அனுமதியோடு தமஸ்குவுக்குச் சமீபித்தபோது ஆண்டவர் இயேசு அவனை சந்தித்தார். அவனுடைய மனக்கண்களை கர்த்தர் திறந்து விட்டார். இயேசுவே மனித குலத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கும் இரட்சகர் என்பதை அறிந்து கொண்டான். அவன் தேவ சித்தம் செய்ய தன்னை முழுமையான அர்பணித்தான். அவனை குறித்து கர்த்தர் அன னியாவுக்கு சாட்சி கூறும்போது: நீ அவனிடம் போ. அவன் புறஜாதிக ளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாம த்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கி றான் என்றார். பிரியமானவர்களே, நம்முடைய கடந்த காலம் எப்படிப்ப ட்டதாக இருந்தாலும், நாம் தேவனாகிய கர்த்தருடைய சித்தம் செய்ய நம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்கும் போது, தேவன்தாமே நம்மை விலையேறப்பெற்ற பாத்திரமாக மாற்றுகின்றவராயிருக்கின்றார். பவுல் என்று சொல்லப்பட்ட சவுல், தனக்குண்டான மதவைராக்கியத்தி னால் சபையை துன்பப்படுத்தினான். அதனால், அவன் செய்தது நீதி என்று நியாயப்படுத்த முடியாது. அநீதியான செயல்களை செய்த அந்த மனிதனையும், தேவன்தாமே தமக்கென பிரித்தெடுத்து, தமக்கு உகந்த பாத்திரமாக மாற்றினார். கடந்த காலத்திலே நீங்கள் என்ன செய்தீர்கள் என்ன செய்யவில்லை, என்னத்தை கற்றேன், என்னத்தை கற்றுக் கொள் ளாமல் விட்டேன் என்பதை குறித்து சோர்ந்து போகாமல், இப்போது கர்த்தருக்குள் திடன் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை பூரணமாக ஒப்புக்கொடுங்கள், அவர் உங்களை தமக்கு உகந்த பாத்திரமாக மாற்றி, உங்களை வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

என்னை பெயர் சொல்லி அழைத்த தேவனே, என் வாழ்வில் என்னுடைய சுய வைராக்கியத்தின்படி கிரியைகளை நடப்பிக்காமல், உம்முடைய சித்தத்தின்படி நான் வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:9