புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 02, 2023)

எல்லாம் புதிதாயின

2 கொரிந்தியர் 5:17

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.


ஒரு ஊரிலே பல தசாப்தங்களாக இயங்கி வந்த பத்திரிகை அச்சக த்திலே, பத்திரிகைகளை துரிதமாகவும், துல்லியமாகவும் அச்சிடுவதற்கு, நவீன தொழிநுட்பத்தையுடைய அச்சுப் பொறிகளை கொள்வனவு செய்தார்கள். அச்சுக்கூடத்திலே தொழில்புரிபவர்களுக்கு வேண்டி பயிற்சிகளை கொடுத்திருந்த போதும், பத்திரிகைகளை குறித்த நேரத்திற்கு அச்சிட முடியாமலும், அச்சிட்ட பத்திரிகைகளிலே கழிவுகள் அதிகமாக இருப்பதையும் அதன் இயக்குனர் கண்டு மிகவும் குழப்பமடைந்தார். காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த போது, அச்சுக்கூடத்தின் முகாமையாளர், பழைய அச்சுப் பொறிகளிலே மிகவும் அனுபவமிக்கவராக இருந்ததால், பழைய அச்சுப் பொறியையும், காலம் கடந்த தட்டெழுத்து முறைமைகளையும் விட்டுவிட மனதில்லாமல், அவைகளையே உபயோகித்து வந்தார். இதை அறிந்து கொண்ட இயக்குனர் கோபமடைந்து, அந்த முகாமையாளருக்கு எச்சரிப்பை வழங்கினார். பிரியமானவர்களே, இவ்வண் ணமாகவே, நாமும் கிறிஸ் துவை அறிய முன்னதாக இந்த உலகத்தின் போக்குகளுக்கு உட்பட்டவர்களாக, அதன் முறைமைகளை பின்பற்றி வந்தோம். இது பழையமனுஷனுக்குரிய முறைமைகள். நாம் கிறிஸ்துவை அறிந்து கொண்டபோது, தேவபிள்ளைகளாக்கப்பட்டோம். அந்த நாளிலே, தேவனுடைய பரிசுத்த வித்தை நமக்குள்ளே பெற்று, மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டு, கிறிஸ்துவின் சுபாவங்களுக்குரிள புதிய மனு ஷனுக்குரிய முறைமைகளை பெற்றுக் கொண்டோம். பழைய சுபாவங் களுக்கு இனி இடம் இல்லை என்று தேவ சமுகத்திலே தீர்மானம் செய்து கொண்டோம். அப்படி தீர்மானித்த பின்பும், பழைய முறைமைகள் நம்மில் இயங்கிக் கொண்டிருக்குமானால், புதிய மனுஷனால் உண்டாகும் தெய்வீக முறைமைகளுக்கு இடமில்லாதிருக்கும். எடுத்துக்கட்டாக, உங்கள் அன்பு மாயமற்றதாக இருப்பதாக என்று வேதம் கூறுகின்றது. மாயையான இந்த உலகிலே எப்படி நம்முடைய அன்பு மாயமற்றதாக இருக்க முடியும்? புதிய மனுஷனுக்குரிய ஆவிக்குரிய முறைமை களானது நம்மில் இயங்குவதற்கு நாம் இடம் கொடுக்க வேண்டும். மாறாக, நாம் பழமையான உலக முறைமைகளை நம்மில் விட்டுவிட மனதில்லாதிருப்போமானால் நாம் மறுபடியும் மாயக்காரராக மாறிவிடுவோம். எனவே கிறிஸ்துவின் அன்பு நம்மில் வெளிப்படும்படி புதிதும் ஜீவனுமான முறைமைகளுக்கு நாம் இடம்கொடுப்போமாக.

ஜெபம்:

புதிதும் ஜீவனுமான மார்க்கத்தினுள் என்னை அழைத்த தேவனே, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, என்னுடைய பழைய மனுஷனுக்குரிய முறைமைகளை முற்றாக களைந்துவிட பெலன் தந்து நடத்துவீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:9