புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 30, 2023)

மனதிலே உண்டான மாற்றம் என்ன?

பிலிப்பியர் 4:5

உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனானவன், தன்னுடைய வழிகள், கொள்கை கோட்பாடுகளைக் குறித்து விமர்சிக்கின்ற எந்த மனிதன் மேலும் சீக்கிரமாய் கோபமடைந்து, அவர்கள் வாயை அடக்கும்படிக்கு கடுமையான தொனியிலே அவர்களை எதிர்த்து வாதம் செய்கின்ற வனாக இருந்து வந்தான். தன்னுடைய விவாதத்தின் வலிமையை குறித்து அவன் தனக்குள்ளே பெரு மைபாராட்டி வந்தான். பல ஆண்டு களுக்கு பின்னர், அவன் ஆண்டவ ராகிய இயேசுவை ஏற்றுக் கொண்டு இரட்சிப்படைந்தான். ஒருநாள் அவ னுடைய அயலில் வசிக்கின்ற மனி தனொருவன், அவனுடைய மனமா ற்றத்தையும், இரட்சிப்பையும், இயேசுவையும் குறித்து விமர்சித்து பேசினான். அதை கேட்டவுடனே இவன் மிகவும் கோபமடைந்து, அந்த அயலவனின் மார்க்கத்தையும், அவன் வாழ்க்கை முறையையும் குறித்து கடும் வார்த்தைகளை கூறி அவனுடைய வாயை அடக்கி விட்டான். அன்றிரவு, அவன் படுக்கைக்கு சென்றபோது அவன் மனதிலே சமா தானம் இல்லை. அவனுக்கு ஒழுங்காக தூங்க முடியவில்லை. காலை யிலே எழுந்திருந்த போது, தன்னுடைய பரிதாபமான நிலைமையை உணர்ந்து கொண்டான். உன் சகோதரனை பகைக்காதே என்று சொன்ன இயேசு, உன் பிறனை நேசி என்று கூறியிருக்கின்றார். பிறன் யார் என்ப தையும் நல்ல சமாரியன் உவமை வழியாக விவரித்துக் கூறியிரு க்கின்றார். (லூக்கா 10: 29-37). அப்படியிருந்தும், தான் தன் பிறனுக்கு தன் வாழ்க்கையின் நல்ல மாற்றங்கள் வழியாக சாட்சியை காண்பிக் காமல், தன்னிடமிருந்த பழைய சுபாவமாகிய அகங்காரத்தின் வலி மையை காண்பித்ததையிட்டு மனம் வருந்தினான். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் ஆண்டவராகிய இயேசுவின் பாதுகாவல ர்கள் அல்ல. அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். மாறாக நாம் அவரு டைய சீஷர்களாக இருக்கின்றோம். எனவே அவருடைய சுபாவங்களை வெளிக்காட்டும் சாட்சிகளாக வாழ வேண்டும். இந்த உலகிலே நாமும் அறியாமையிலே வாழ்ந்த நாட்கள் உண்டு. தேவ கிருபை வெளிப்பட்ட போது, பிரகாசமுள்ள மனக்கண்களை பெற்றுக் கொண்டோம். நம்மு டைய சாட்சியான வாழ்க்கை வழியாக மற்றவர்களும் இயேசுவை நம் மில் கண்டு கொள்ளும்படியாக, புதிய மனுஷனுக்குரிய சாந்த குண த்தை நாம் காண்பிக்கின்றவர்களாக வாழ வேண்டும்.

ஜெபம்:

நீடிய பொறுமையுள்ள தேவனே, புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:24