தியானம் (சித்திரை 28, 2023)
ஐசுவரியம் மிகுதியாயிற்று...
1 தீமோத்தேயு 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த இரண்டு சகோதரர்கள் உண்மையும் உத்த முமான வழியிலே நடந்து வந்தார்கள். அவர்களுடைய கைகளின் பிர யாசத்தை தேவன் ஆசீர்வதித்ததால், அவர்களுககு உலக ஐசுவரியம் பெருக ஆரம்பித்தது. முன்னைய நாட்களிலே தன் பெற்றோரும், குடுத் பத்தினரும் பட்ட கஷ;டங்களை மனதிற் கொண்டவனாய், அவன் தன க்குண்டான செல்வத்தில் மிகுதியான வைகளை, ஊரிலுள்ள ஏழை, எளியவ ருக்கு தாராளமாய் கொடுத்து வந்தான். அவன் தன்னுடைய பரமதந்தையைப் போல இரக்கத்தில் ஐசுவரியமுள்ள வ னானான். இளையவனோ, தேவன் தன் செல்வத்தை பெருக்கப்ப பண்ணினார் என்று, காணிகளையும் நிலங்களையும் வாங்கி, மிகுதியானவைகளை பங்குச் சந்தையிலே முதலீடு செய்து, தனக்கும் தன் குடும்பத்திற்கும் சேர்த்து, அந்த ஊரிலே மிகுந்த ஆஸ்தியுள்ளவனானான். ஆனால், மன இரக்கத்திலோவென்றால் தரித்திரமுள்ளவனான். அநேக ஆண்டுகளுக்கு பின்னர், மூத்தவன் மரித்து, அடக்கம் செய்யப்பட்டான். அவனுடை பிள் ளைகளும், ஊரிலுள்ள மனிதர்களும் அவனுடைய வாழ்விற்காக பிதா வாகிய தேவனுக்கு கண்ணீரோடு நன்றி செலுத்தினார்கள். வாரியிறை த்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என் றென்றை க்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடி அவனுக்கு உண் டாயிற்று என்று கூறி அவனைக் குறித்து சாட்சி பகின்றார்கள். இளையவனும்; வயது சென்று பெலவீனமுற்றிருக்கும் நாட்களிலே தன் ஆஸ்திகளை தங்களுக்கிடையே பங்கிட்டுக் கொள்வதற்காக தன்னுடைய பிள்ளைகள் ஓயாமல் சண்டை செய்து கொண்டிருப்பதை கண்டு மிகவும் மனவே தனை அடைந்தான். ஆண்டுகள் கடந்து அவன் மரித்துப் போன பின்பும், பிள்ளைகள் மத்தியிலே வழக்குக்கும், வாதுக்கும், கலகத்திற்கும் ஒய்வி ல்லாமல் இருந்தது. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனை களாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்ற வார்த் தையின்படி இளைவனுடைய சந்ததி, சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுந்து போனார்கள். பிரியமானவர்களே, ஐசு வரியமானாலும், வறுமையானாலும், பிதாவாகிய தேவனு டைய சித் தத்தை நிறைவேற்றி, பரலோகத்திலே நமக்கு செல்வத்தை சேர்த்து வைப்பதே நம்முடைய நோக்கமாக இருக்கட்டும். நித்தியமானதும் அழியாத மேலானதுமான காரியங்களிலே முதலீடு செய்யுங்கள்.
ஜெபம்:
நித்திய வாழ்விற்கு என்னை அழைத்த தேவனே, ஐசுவரியத்தின் மயக்கத்தினால் நான் உணர்வற்றுப் போய்விடாதபடிக்கு, நாட்களை எண் ணும் அறிவை தந்து, காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 கொரி 8:13-15