புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 26, 2023)

பரிபூரணமான நிலையை அடைதல்

சங்கீதம் 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.


எளிமையான வாழ்க்கை வாழும் ஒரு விசுவாசியானவன், அனுதினமும் அதிகாலையிலே எழுந்திருக்கும் போது, இன்றைய நாளுக்குரிய ஆகார த்தை எங்களுக்கு தந்தருளும் என்று பிதாவாகிய தேவனை அவன் வேண்டிக் கொள்வான். ஆவிக்குரிய ஆகாரத்தை மட்டுமல்ல, அன்றன் றைய நாளுக்குரியவைகளை தேவன தன் குடும்பத்திற்கு கொடுத்தருள வேண்டும் என விசுவாசத்தோடு காத் திருப்பான். தன் தோட்டத்தின் பிர யாசங்களின் பலனை, சந்தைப்படு த்த அடுத்து ஊருக்கு செல்வதற்கு தனக்கு வழியுண்டாக வேண்டு மென தேவனிடம் கேட்டுக் கொள்வான். இப்படியானதொரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த போதும், அவன் தேவனோடு நடந்து சென்றான். காலங்கள் கடந்து சென்றதும், அவனு டைய நீதியான பிரயாசத்தினாலே அவனுக்கு பலன் உண்டாயிற்று. தேவ அனுக்கிரகத்தினாலே உலக ஐசுவரியத்தினாலும் அவன் ஆசீர் வதிக்கப் பட்டு பரிபூரணம் அடைந்தான். இப்போது, என்னவெனில் அதிகாலை யிலே எழுந்து இன்றைக்குரிய ஆகாரத்தை எங்களுக்கு தந்தருளும் என்று அவன் தேவனிடம் வேண்டிக் கொள்வதில்லை. தான் அறிக்கையி ட்டது தனக்கு நடைபெறும் என்று விசுவாசித்து காத்திருக்க வேண்டியது மில்லை. முன்னைய நாட்களிலே அனுதினமும் தேவனோடு நடந்து செல் வதற்கு அவனுடைய தேவைகளே அவனுக்கு உதவியாக இருந்தது. இப்போது, அவன் காலையிலே எழுந்து தேவனோடு உறவாடுவதற்கு அவனுக்கு தேவைகளிருக்கவில்லை. தனக்குண்டானவைகளை பெருக் குவதற்கும், செலவு செய்வதற்கும், தன் செல்வத்தை திருடர்களிடமி ருந்து காத்துக் கொள்வதற்கும் திட்டங்கள் போடுவதிலேயே அவன் அதிக நேரத்தை செலவிடவேண்டியிருந்தது. பரிபூரணமடைந்தால், தேவ னோடு நடக்க முடியாது என்பது பொருளல்ல, ஆனால், தேவனோடு நடப்பதற்கு உறுதியான தீர்மானம் செய்து கொண்டு, யோபுவைப் போல, தேவபயத்தோடு, உத்தமாமான வழியிலே நடந்து, அவன் தன் வாழ்க் கையை அவன் தேவ வார்த்தைகளின்படி காத்துக் கொள்ள வேண்டும். தேவனாகிய கர்த்தர் தாமே சாலொமோன் ராஜாவுக்கு, ஞானமும் விவே கமும் கொடுத்ததுமல்லாமல், திரளான ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தை யும் கொடுத்து அவனை ஆசீர்வதித்தார். தேவ ஞானம் அவனுக்கிருந்த போதும், அவனுக்குண்டான பரிபூரணமான வாழ்க்கை அவனை தேவனைவிட்டு தூரம் போக செய்தது. உயர்வோ, தாழ்வோ, எந்நிலை யோ, நீங்கள் எப்போதும், கர்த்தருக்கு பயந்து அவருடைய வழியிலே உத்தமமாக நடக்கும் பாக்கியவான்ளாக இருங்கள்.

ஜெபம்:

ஆசீர்வதிக்கும் தேவனே, இந்த உலகத்தில் எனக்கு உண்டாகும் பரிபூரணத்தினால் நான் உம்மை மறந்து போகாதப்டிக்கு நீர் எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 30:9