புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 25, 2023)

உயர்வோ தாழ்வோ

பிலிப்பியர் 4:12

தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்;


இந்த உலகிலே பொதுவாக மனிதர்கள் கஷ;டத்துடனும், வறுமையுடனும் வாழ்வதைவிட செழிப்புடனும், ஐசுவரியத்துடனும் வாழ்வதையே விரும் புகின்றார்கள். சிலர் கஷ;டத்தையும் வறுமையும் சாபம் என்றும், செழிப் பையும் ஐசுவரியத்தையும் ஆசீர்வாதம் என்றும் வகையறுத்து தங்கள் கருத்துக்களை கூறுகின்றார்கள். அப்படியானால், இந்த உலகத்திலே கோடீஸ்வரராக மாளிகைகளில் வாழ் கின்றவர்கள் யாவரும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களா? என் பிரியமான சகோத ரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலக த்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசு வரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக் குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள்ளவில்லையா? நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீ ர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங் களை ஒடுக்குகிறார்கள்? அவர்க ளல்லவோ உங்களை நியாயாசனங்க ளுக்கு முன்பாக இழுக்கிறார்கள்? உங்களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷp க்கிறார்கள் என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். தேவனு டைய ஊழியராகிய பவுல் என்பவர், பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேக முறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தார். மேலும், கர் த்தருடைய ஊழியர்கள் சிறையில் போடப்பட்டு, பல துன் பங்களை அனுபவித்து, இரத்த சாட்சிகளாக மரித்தார்கள் என்பதை நாம் அறிந்தி ருக்கின்றோம். ஆனால் அவைகள் மத் தியிலும் அவர்கள் தேவன்மேல் கொண்ட விசுவாசத்திலே உறுதியாய் இருந்து, தேவ சமா தானத்துடன் தங்கள் திருப்பணியை நிறைவேற்றி முடித்தார்கள். அது மட்டுமல் லாமல், தங்களுக்கு உண்டான உபத்திரவங்களை பொரு ட்படுத்தாமல், விசவாசிகளுக்கு உண்டாகும் சோதனைகளிலே அவர்கள் தளர்ந்து போகக்கூடாது என்று, கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இரு ங்கள் என்று அறிவுரை கூறியிருக்கின்றார்கள். பிரியமானவர்களே, தேவ னால்; கூடாத காரியம் ஒன்றுமில்லை. தேவனுக்கு பயந்து அவரு டைய சீஷர்களாக இருந்த ஒரு சில ஐசுவரியவான்களை வேதத்;திலே காண்கி ன்றோம் அதனால் மனுஷர்களுக்கு உண்டாயிருக்கும் உலக ஐசுவரிய மெல்லாம் தேவனால் உண்டானதில்லை. எந்த சூழ்நிலையிலும் தேவ னைச் சார்ந்து வாழ்வதிலேயே உறுதியாய் இருங்கள். நம்மை பெலப்ப டுத்துகின்ற ஆண்டவராகிய இயேசு எல்லா சூழ்நிலைகளிலும் மனரம் யமாக இருக்க நமக்கு பெலன் தருகின்றார்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, உலகத்தின் போக்கில் நான் வாழாதபடிக்கு, உம்முடைய வார்த்தையின் வழியிலே நான் எப்போதும் உறுதியுள்ளவனாக இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:1-7