புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 23, 2023)

எனக்கு ஏற்ற இடம் எது?

எபேசியர் 4:14

மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்


ஆதியிலே சத்தியதைகக் கைக் கொண்டு தங்கள் இலக்கை நோக்கி நன்றாக ஓடியவர்கள், பாதி வழியிலே, தங்கள் உலக வாழ்க்கையின் பாணிக்கு (Style) ஏற்றபிர காரமான சபைகளைத் தேடுகின்றார்கள். ஏனென்றால், ஆரோக்கியமான உபதேசமானது, தங்கள் தனிப்பட்ட வாழ்ககையோடு (Personal Life) முட்டி மோதிகின்றதென்பதையுணர்ந்து சத்தியமான உபதேசத்திற்கு ஏற்ப தங்கள் பாணியை மாற்றிக் கொள்ள மனதற்றவர்களாக, செவித்தினவுள்ளவ ர்களாகி, சுய இச்சைகளுக்கேற்ற 'நீயும் சரி, நானும் சரி, எல்லோரும் சரி' என்று போதிக்கும் போதகர்களை தேடிக் கண்டு பிடிக்கின்றார்கள். தாங்க ளும் கிறிஸ்தவர்கள் என்ற போர் வையைப் போர்த்துக் கொண்டு, தங்களது உலக வாழ்க்கையின் நோக்கங்களை எதுவித குற்ற உணர்வுமின்றி நிறைவேற்ற மன துள்ளவர்களாக இருக்கின்றார்கள். சுயஇச்சைகள் என்று கூறும் போது, இவர்கள் குடித்து, வெறித்து, துன்மார்க்கமாய் வாழ்பவர்கள் என்பது பொருளல்ல. தாங்கள் அடைந்து கொண்ட கல்வி, வேலை, புதிய அந்த ஸ்து, புதிய நண்பர்கள், பழைய உறவுகள் இவைகளுக்கு ஏற்ப போத னைகளை தேடுகின்றார்கள். விசுவாச மார்க்கத்தார் சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுகதைகளுக்குச் சாய்ந்து போகும் காலம் வரும் என்று சத்திய வேதத்திலே பார்க்கின்றோம். இப்படிப்பட்டவர்களும் தங் கள் வழிகளை நியாப்படுத்திக் கொள்கின்றார்கள். அப்படியானால் அவ ர்களை எப்படி அறிந்து கொள்வது? 'நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது. அந்தந்த மரம் அதன தன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச் செடியில் திராட்ச ப்பழங்களைப் பறிக் கிறதுமில்லை' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். அவ ர்களை பின்தொடர்ந்து, அவர்களை குறித்து ஆராய்ச்சி செய்வதிலே நம் வாழ்நாட்களை கழிப்பது நம்முடைய நோக்கம் அல்ல. மாறாக, சத் தியத்தை தங்களைவிட்டு வில க்கிக் கொள்கின்றவர்களை நாம் விட்டு விலகி, அவர்களுடைய ஆவிக்குரிய தொற்று நோய் நம்மையும் வஞ் சிக்காதபடிக்கு நம்முடைய சிந்தையை நாம் காத்துக் கொள்ள வேண் டும். தேவ பிள்ளைகளே, உங்களுக்கேற்ற சத்தியத்தைத் தேடாமல், தேவனுடைய சத்தியத்திலே உறுதியாய் நிலைத்திருந்து கிறிஸ்து இயே சுவுக்குள் நல்ல கனிகளை கொடுங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, உம் சத்திய வசனத்திலே நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:4-7