புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 22, 2023)

இலக்கை நோக்கிய பயணம்

2 தீமோத்தேயு 4:5

நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.


சில தசாப்தங்களுக்கு முன், தன் மனைவி பிள்ளைகளோடு, தன் சொந்த தேசத்தைவிட்டு, மேற்கத்தைய நாடொன்றிற்கு குடியேறிய நடு த்தர வயதையுடைய மனிதனொருவன், குடும்பத்தின் பிழைப்புக்காக வேலை தேடித்திரிந்தான். உத்தியோகங்கள் செய்வதற்கு அவனுக்கு படி ப்போ பட்டமோ இல்லை. விரும்பத்தக்க ரூபமும் அவனுக்கிருக்கவி ல்லை. வேலை செய்யும் இடத்திலே கஷ;டங்கள் உண்டாகலாம் என்றும், பாiஷ காரணமாக மனிதர்கள் மத் தியிலே அவமானமடைய நேரிட லாம் என்பதும் அவனுக்கு தெரியும் ஆனாலும்;, அவையயொன்றையும் பொருட்படுத்தாமல், தான் ஏதோ ஒரு வேலையை செய்து, தன் குடும்பத் தின் விவகாரங்களை கவனிக்க வேண்டும் என்பதே அவனுடைய ஒரே நோக்கமாக இருந்தது. அந்த குறிக்கோளை நோக்கின அவன் நிதா னமாய் பயணம் செய்தான். ஆம் நம்முடைய நேச மீட்பராகிய இயேசு, சுமார் முப் பத்து மூன்றரை வருடங்கள் இந்த பூமியிலே வாழ்ந்தார். பாடு;கள், துன்பங்கள், அவமானங்கள், நிந்தைகள், இரத்தம் சிந்துதல், கொடூரமான பகிரங்க மணரம் தனக்கு உண்டு என்று அறிந்திருந்தும், அந்த நாளுக்காக கல்வாரியை நோக்கி பயணம் செய்தார். அவர் தன் குறிக்கோளைவிட்டு சறறேனும்; விலகவில்லை. கல்வாரியை நோக்கிய பயணத்தைவிட்டு அவர் வெளியேறவில்லை. தன்னுடைய சித்தப்படிய ல்ல, தன்னை அனுப்பினவராகிய அவர் தம் பிதாவின் சித்தம் நிறைவே ற்றுவதே அவருடைய ஒரே நோக்கமாக இருந்தது. அவர் அதை சம்பூ ரணமாக நிறை வேற்றி முடித்தார். நம்முடைய வாழ்க்iயிலும் பிதாவா கிய தேவனானவர், நமக்கு ஒரு சம்பூரணமான திட்டத்தை வைத்திரு க்கின்றார். அந்த திட்டத்தின் பாதையிலே சவால்களும் உபத்திரங்களும் உண்டு. அதைக் குறித்து மனத்தெளிவுள்ளவர்களாக இருக்கின்றீர்களா? சுவிஷே சத்தின் நிமித்தம் குடும்பத்தில், சபையில், உறவுகள் மத்தியில், வேலை செய்யும் இடங்களில், பாடுகளை சகித்துக் கொள்ள ஆயத்தமா? புதிய நாட்டிற்கு குடியேறிய மனத்தாழ்மையுள்ள மனிதனைப் போல, நாமும் நம் மீட்பராகிய இயேசுவைப் போல, நமது இலக்கை நோக்கி முன்னேறுவோமாக. நாம் செல்லும் பாதையிலே தூய ஆவியா னவரின் துணை உண்டு. அதன் முடிவிலே மகிமையின் கீரிடம் நமக்குண்டு.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, கோணலும் மாறுபாடுமான சந்ததி நடுவிலே கறையற்ற வாழ்க்கை வாழ்ந்து, இருளடைந்திருக்கும் உலகத்திலே உம்முடைய வெளிச்சத்தை வீசும்படி என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 4:1-5