புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 21, 2023)

நற்பலன் சமீபித்திருக்கின்றது

யாக்கோபு 5:8

நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்


பல்கலைக் கழகமொன்றில் விஞ்ஞான அறிவியல் பிரிவில், கல்வியை கற்றுக்கொண்டிருந்த ஒரு மாணவனானவன், தனது இறுதிப் பரீட்சைக் காக ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தான். பல சிரமங்கள் மத்தி யில் கடந்த ஆண்டுகளை படித்து முடித்த அந்த மாணவனானவன், கடைசி ஆண்டின் பாடத்திட்டம் மிகவும் கஷ;டமாக இருக்கின்றது என தன் படிப்பை இடை நிறுத்த தீர்மா னம் செய்து கொண்டான். அவன் பெற் றோரும், சகோதரரும் அவனுக்கு புத் திமதிகளை சொன்னார்கள். நீ இத்த னை ஆண்டுகளை முடித்துவிட்டாய், இன்னும் சில மாதங்களில் இறுதிப் பரீட்சையை முடித்து, நீ பட்டம் பெற் றுக் கொள்வாய். விஞ்ஞான பிரிவில் நீ படிக்கும் பாடங்கள் இப்போது இருப்பதைவிட கடினமாக இருக்க ப்போவதில்லை என்று அவனை உற்சாகப்படுத்தினார்கள். ஆனால், அவனோ தான் படித்து பட்டம் பெறுவது அண்மித்திருந்தபோதும், மதியீ னமாக தன் படிப்பை இடை நிறுத்தி பல்கலைக்கழகத்திலிருந்து வெளி யேறினான். இவ்வண்ணமாகவே சில தேவ பிள்ளைகளும் வாழ்க்கை யிலே பல கஷ;டங்களையும் உபத்திரவங்களையும் கடந்து வருகின்றா ர்கள், தங்கள் பிரயாசத்தின் பலனானது கைகூடும் நாட்கள் அருகில் இருக்கும் போது மதீயீனரைப் போல தங்கள் வாழ்வில் தவறான தீர்மா னங்களை எடுத்துக் கொள்கின்றார்கள். இந்த உலகத்திலே உங்களுக்கு உபத்திரவங்கள் இல்லை என்று தேவனானவர் ஒருபோதும் நம்மிடம் கூறவில்லை. நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் எந்த சூழ் நிலையானாலும் நான் உங்களை கைவிடுவதில்லை என்பதே அவர் நம க்கு கொடுத்த வாக்குத்தத்தமாக இருக்கின்றது. மேற்கூறிய சம்பவத்தி லுள்ள மாணவனானவன் தன் இரண்டு காரியங்களை குறித்து கவனமு ள்ளவனாக இருந்திருக்க வேண்டும். முதலாவதாக, உபத்திரவங்களை சகி க்காமல் முடிசூடப்பட முடியாதென்பதையும், அதாவது சவால்களும் உபத்திரவங்களும் இல்லாத நல்வாழ்வு இந்த உலகத்திலே இல்லை. இரண்டவதாக, அவன் சகிப்புத்தன்மையை குறி த்து அனுபவரீதியாக கற்றுக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் சவால்கள் நம்மை நோக்கி வரும்போது, நாம் எளிதில் அந்த சமுகத்தையோ, சபையை யோ, குடுத்பத்தையோ, உறவுகளையோ, நண்பர்களையோ, சக ஊழி யர்களை விட்டு விலகாதபடிக்கு, நீடிய பொறுமையுள்ளவர்களாய் இரு க்க கற்றுக்கொள்ள வேண்டும். நற்பலனை அறுக்கும் காலம் சமீபித்திரு க்கின்றது என்று அறிந்தவர்களாக நம் கர்த்தருக்காக நீடிய பொறுமையோடு காத்திருப்போமாக.

ஜெபம்:

உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று கூறிய தேவனே, உபத்திரவங்களிலே பொறுமையாய் இருக்க நீர் எனக்கு கற்றுத் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 32:8