புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 20, 2023)

கர்த்தர் நம்மோடு பேசுகின்றார்

நீதிமொழிகள் 1:30

என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.


ஞானமுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளையின் எல்லாப் பருவங்களிலும் அவர்களோடு உறவு கொண்டாடுகின்றவர்களாக இருக்கின்றார்கள். பிள்ளை எதிர்நோக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நல்ல ஆலோசனைகளையும், தகுந்த புத்திமதிகளையும் வழங்கின்றவர்களாயும் இரு க்கின்றார்கள். ஆலோசனைகயும், புத் திமதிகளையும் வழங்குகின்றார்கள் என்று கூறும்போது, செல்லமாக பேசு கின்ற பருவம் இருந்தது. அரவணை த்து தூக்கிச் சுமக்கும் காலங்கள் இரு ந்தது. கண்டித்து பேசிய நாட்கள் இருந்தது. சிட்சித்து நடத்தும் நேரங்களும் இருந்தது. நல்ல பெற்றோர் தங்கள் பிள்ளையை நேசிப்பதினால், தங்கள்; பிள்ளை நல்வழியிலே வாழ வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், பிள் ளையானவன், ஆண்டுகள் கடந்து செல்லும் போது, தன் பெற்றோரின் அறிவுரைகளை அற்பமாக எண்ணிக் கொள்வதால் தவறனா தீர்மா னங்களை எடுத்துக் கொள்கின்றான். இது புது யுகம். நாகரீகமான உலகம். வயதானவர்களுக்கு இது புரியாது என்ற எண்ணமுடையவர் களாகவே பிள்ளைகள் மாறிவிடுகின்றார்கள். என் மகனே, உன் தகப் பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே என்று வேதம் அறிவுரை கூறுகின்றது. அதுபோலவே நம்முடைய பரம தந்தை யாகிய தேவன் எப்போதுமே நம்மோடு பேசுகின்றவராக இருக்கின்றார். ஒருவேளை நம்முடைய பூவுல பெற்றோர் நம்மை மறந்து போனாலும், பரலோக தந்தையானவர் நம்மை மறக்கவே மாட்டார். அப்படியானால் சில வேளைகளிலே ஏன் தேவ பிள்ளைகள் தேவசத்தத்தை கேட்க முடியாமல் இருக்கின்றார்கள்? தேவன்தாமே தாம் நியமித்த ஒழுங்கு முறை களின்படி ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றார். ஆனால், தேவன் நியமித்தவர்களை அசட்டை செய்வதால், அவர் கள் வழியாக தேவன் கூறும் ஆலோசனைகளையும் தள்ளிவிடுகின்றார்கள். கர்த்தர் அவரோடு மட்டுமா பேசுவார்? என்னோடும் பேசுவார் என்று பெருமை கொள்வதால் தங்கள் இருதயங்களை கடினப்படுத்திக் கொண்டு, காலத்திற்கேற்ப தகுந்த தேவ ஆலோசனைகளை அவர் புறகணித்து விடுகின்றார்கள். பிரியமானவர்களே, மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள். தேவ ஆலோசனைகளுக்கு கீழ்படியுங்கள். அப்பொ ழுது எக்காலத்திலும் நீங்கள் ஞானவான்களாக நடந்து கொள்வீர்கள்.

ஜெபம்:

என்னோடு பேசும் தேவனே, என் வாழ்நாள் முழுவதும் உம் ஆலோசனையையெல்லாம் தள்ளாமலும், உம் கடிந்துகொள்ளுதலை வெறுக்காமலும் வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எண் 12:1-10