புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 19, 2023)

அறியவேண்டியவைகள்

யோவான் 17:3

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.


ஒரு குக்கிராமத்திலே வசித்து வந்த பாட்டியானவள், தன் பேரன்மேல் மிகவும் அன்பு பாராட்டி, அவனுடைய சின்ன வயதிலிருந்து கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தாள். தான், தன் தேவனாகிய கர்த்தரிடத் தில் கொண்டுள்ள விசுவாசத்தை தன் பேரனும் பற்றிக் கொள்ள வேண் டுமென்று நற்போதனைகளை அனுதினமும் சொல்லிக் கொடுத்து வந் தாள். பள்ளிக்கூடத்தில் கனிஷ;ட பிரி வின், படிப்புக்களை முடித்த பின்பு, பேரனானவன், தன் மேற்படிப்புக் காக பட்டணத்த்திற்குச் சென்றான். விடுமுறை நாட்களில் மட்டும் அவன் தன் கிராமத்திற்கு திரும்புவான். இப்படியாக சில ஆண்டுகள் சென்ற பின்பு, அவன் தன் பாட்டியான வளோடு பேசிக் கொண்டிருக்கும் போது, வழமைபோல அந்தப் பாட்டி யானவள், நல்லாலோசனைகளை அவனுக்கு சொல்லிக் கொடுத்தாள். பட்டப்படிப்புகளை முடித்து வாலிப பருவத்திலே இருக்கும் பேரனா னவனும் தன் பாட்டியை அதிகமதிமாக நேசித்து வந்தான். ஒரு நாள் பேரனா னவன் பாட்டியை நோக்கி: பாட்டி, இந்த உலகத்திலே எத்த னையோ அதிசயங்கள் உண்டு. நீங்கள் அறியாத பல காரியங்கள் பட் டணத்திலே நடைபெறுகின்றது. நீங்களோ உலகத்தையறியாமல் நீங்கள் போட்டுக் கொண்ட வட்டத்திற்குள் வாழ்கின்றீர்களே என்றான். அதற்கு பாட்டியா னவள்: தம்பி, நான் உலக அறிவிலே ஒரு கிணற்றுத் தவளை தான். இந்த உலகத்தினால் உண்டான சில நன்மைகளை அறியாதவ ளாக நாட்களை முடிக்கப் போகின்றேன். அதே வேளையிலே, பல சீர்கேடும், துன்மார்க்கமும் இந்த உலகிலே மலிந்திருக்கின்றது. அவை களை நான் அறியாமல் இருப்பது என் ஆத்துமாவிற்கு மிகநல்லது. ஆனால், நான் என் இரட்சகராகிய இயேசுவை நன்கு அறிந்திருக்கின்றேன். அவர் வழியாக எனக்கு நித்திய வாழ்வு உண்டு என்று பூரணமாக விசுவாசிக் கின்றேன். நீ இந்த உலகத்திலே எதை அறிந்து கொள்ள மறந்தா லும், ஒன்றான மெய்தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பினவராகி இயே சுவையும் அறியாமல் ஒரு கணமும் வாழ்ந்துவிடாதே என்று அறிவுரை கூறினாள். ஆம் பிரியமானவர்களே, நாகரீகமான உலகை அறிய வேண் டும் என்று முயற்சி செய்த பலருக்கு, ஆதியிலே தேவன் மேல் தாம் கொண்ட விசுவாசமானது பின்நாட்களிலே அவர்களுக்கு அநாகரீக மாக தோன்றிய தால் விசுவாசத்தைவிட்டு வழுவி பின்வாங்கிப் போனார்கள். நீங்களோ உலகத்தையல்ல, தேவனை அறிகின்ற அறிவிலே வளர்ந்து பெருகுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, இந்த உலகத்தின் அறிவினால் உண்டாகும் வஞ்சகமான வலைக்குள் நான் சிக்கிவிடாதபடிக்கு, உம்மை அறிகின்ற அறிவில் வளர கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 3:17-18