புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 18, 2023)

நாளையைக் குறித்த கவலை

ரோமர் 10:11

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப் படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.


பிள்ளைகளுடைய எதிர்காலம் எப்படியாக இருக்கும்? அவர்களுடைய வாழ்க்கைக்கு ஏற்ற துணையை எப்படி கண்டு கொள்வது? தற் போதைய சூழ்நிலைகளில் அது சாத்தியமாகுமா? என்று பல சந்தே கங்கள் பெற்றோரின் வாழ்விலே எழுவதுண்டு. வாழ்விலே கஷ;டங் களும் துன்பங்களும் சூழ்ந்திருக்கும்போது விசுவாசிகள் கர்த்தரை விட்டால் தங்களுக்கு வழியேதும் இல்லை என்று வாழ்க்கின்றார்கள். அது உண்மையான நிலைமை. ஏனெ னில், அவர்கள் நினைத்த பிரகாரம் வாழ்வதற்கு அவர்களிடம் போது மான பணமோ பொருளோ வசதி யோ இல்லை. எனவே, தங்கள் இயலாத நிலைiயில் வேறு வழியி ல்லாமல் தேவனையே நம்பியிருக் கின்றார்கள். ஆனால், வசதிகள் வாழ்க்கையில் ஏற்படும் காலம் வரும்போது அவர்களுடைய விசுவாச மானது பரீட்சைக்குட்படுத்தபடப் படுகின்றது. அந்த வேளையிலே சிலர் தேவன் சர்வ வல்லமையுள்ளவர் என்றும், குறித்த காலத்திலே, நமக்கு முன்குறித்தவைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையைவிட்டு வழுவிப்போய் விடுகின்றார்கள். தேவனுக்கென்று காத்திருக்ககூடாமல், தேவனுடைய திட்டம் நிறைவேறும்படி தங்கள் மாம்ச சிந்தையினாலே, தேவனுக்கு உதவி செய்ய முற்படுகின்றார்கள். இந்த வரிசையிலே, ஆபிரகாமின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போமென்றால், அவனும் அவன் மனைவியாகிய சாராயும் வயது முதிர்ந்தவர்களாகவும், பிள்ளை யற்றவர்களாக இருக்கும் போது, நான் உங்களுடைய சந்ததியை பெருகப் பண்ணுவேன் என்று சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த் தர் ஆபிரகாமிற்கு வாக்குரைத்தார். ஆண்டுகள் கடந்து சென்ற போது, தேவன் வாக்களித்த சந்ததி சாராய் வழியாக உண்டாக சாத்தியமில்லை என்றும் அது ஒருவேளை மறுமனையாட்டியாகிய ஆகார் வழியாக உண்டாகும் என்று அவன், அவள் வழியாக ஒரு பிள்ளைளை பெற்றெ டுத்தான். ஆனால், கர்த்தரோ, அவன் இல்லை, உன் மனைவியாகிய சாராள் வழியாக உனக்கு ஒரு சந்ததி தோன்றும் என்று மறுபடியும் தன் வாக்குத்தத்தை உறுதிப்படுத்தி, குறித்த காலத்திலே சாராள் வழி யாக ஆபிரகாமிற்கு ஒரு பிள்ளையை கொடுத்தார். எனவே காலம் தாம திக்கின்றது என்று மாம்சத்திலே நீங்கள் கிரியை செய்யாமல், தேவன் முன்குறித்தவைகள் நிறைவேறும்வரை பெறுமையோடு காத்திருங்கள். அவரை நம்பினோர் வெட்கப்பட்டுப் போவதில்லை.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, என் வாழ்க்கையிலே வசதிகள் ஏற்படும் போது, என் மாம்ச சிந்தையின்படி நான் செயற்படாதபடிக்கு, நீ என்னை சிந்தையை உமக்குள் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:34