புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 16, 2023)

கர்த்தர் குறித்த நேரம்

சங்கீதம் 37:5

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.


நம்முடைய ஜீவ யாத்திரையின் நாட்களிலே பல பிரசங்கங்களையும் வேதப்படிப்புக்களையும் கேட்டிருக்கின்றோம். நாம் கற்று அறிந்தவைக ளிலே, மிகவும் முக்கியமான அம்சமாக உங்கள் மன திலே தோன்றும் காரியம் என்ன? கற்றவைகளை வாழ்க்கையின் அனு பமாக மாற்றிக் கொள்ளும் வழியிலே விசுவாசிகளா கிய நாம் தவறக்கூடாததும், பலமுறை தவ றிப்போகும் காரியமொன்றை கூறுங் கள் என்றால், அவற்றில் எது உங்கள் கண்களுக்கு முன்பாக தெரிகின்றது. சற்று சிந்தித்துப் பாருங்கள்! கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்பீர்களா னால், நம்முடைய கிறிஸ்த வாழ்க்கை யிலே ஒரு சில முக்கியமான காரியங் களானது நம்; மனதிலே தோன்றலாம், அவைகளில் 'தேவனுடைய வேளைக்காக காத்திருத்தல்' நாம் தவறக்கூடாத மிக முக்கியமான காரி யமாகும். ஆனால் நாம் அதிலேயே அதிகமாக தவறி ப்போய்விடுகின் றோம். நாம் மட்டுமல்ல, வேதத்தில் காணும் தேவனுக்கு பிரியமான பாத்திரங்களும் கூட, தேவனுடைய வாக்குத்தத்தத்தை குறித்து பொறு மையை இழந்து, தேவனுடைய வேளைக்கு காத்திருக்க தவறி யதால் அவர்கள் வாழ்க்கையிலே பின்னடைவுகளை கண்டார்கள். தேவன் சுமத்தாத பாரங்களை தங்கள்மேல் தாங்களே சுமத்திக் கொண்டார்கள். வாக்குரைத்த தேவன் உண்மையுள்ளவர் என்றும் அவர் வாக்கு மாறா தவர் என்றும், அவர் செய்ய நினைத்ததை யாரும் தடுக்க முடியாது என்றும் நாம் நன்கு அறிந்திருந்தாலும், சில வேளைகளிலே, அவர் குறித்த வேளை வருமுன், காரியங்களை நம்முடைய கரத்திலே நாம் எடுத்துக் கொண்டு, தேவ ஆலோசனைகளை தள்ளிவிட்டு, நம்முடைய பார் வைக்கு செம்மையாக தோன்றும் வழியிலே காரியங்களை தீவிரமாக செய்து முடித்து விடுகின்றோம். ஆனால், ஆண்டுகள் கடந்து சென்று மறுபடியும் புத்தி தெளியும் போது, நாம் செய்தவைகளைக் குறித்து மனம்வருந்துகின்றோம். கர்த்தர் அவசரப்படுவதுமில்லை, அவர் பிந்தி நடப்பிப்பவருமில்லை. அவர் மறந்து போகின்றவருமில்லை. அவர் முன் குறித்த நேரத்திலே, முன்குறித்தவைகளை நடத்தி முடிக்கி ன்றார். எனவே, பொறுமை இழந்து போகும்படி காரியங்கள் தாமதிப் பதுபோல தோன்றலாம், அந்த வேளைகளிலும், உங்கள் வழிகளை கர்த்தருக்கு ஒப்புவித்து காத்திருங்கள். தேவ ஆலோசனைகளை அற்ப மாக எண்ணாமல், அவற்றை கேட்டு கீழ்படிவுள்ளவர்களாய், ஜெபத் திலே தரித்திருங்கள். கர்த்தர் யாiவுயும் செய்து முடிப்பார்.

ஜெபம்:

சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிற தேவனே, நான் உம்முடைய வேளைக்கு காத்திருக்க எனக்கு பொறுமையை கற்றுத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:31