தியானம் (சித்திரை 15, 2023)
காணும் உலகமா? காணாத பரலோகமா?
1 யோவான் 2:15
உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்
இன்றைய உலகமானது, முன்னர் இருந்த உலகங்களைவிட அறிவு பெருத்த யுகம் என தற்போதிருக்கும் இந்த உலகத்தின் ஞானவான்கள் கருதுகின்றார்கள். இந்த உலகத்திலே கொஞ்சக் காலம் வாழும் நாம், வாழ்வாதாரத்திற்காக பல காரியங்களை செய்கின்றோம். கல்வி கற்கி ன்றோம், உழைக்கின்றோம், வீடுகளை கட்டுகின்றோம், உடுத்துவதற்கு உடைகளை உண்டு பண்ணுகின் றோம், இன்னும் சில பொழுது போக் கான காரியங்களை செய்து வரு கின்றோம். எனவே அதிலே நன் மைகள் இல்லை என்று முற்றிலும் புறக்கணித்துவிட முடியாது. ஆனால் பெரும்பாலான மனிதர்க ளோ, இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் அநித்தியமானவைகள் என் பதை அறிந்தும் கூட அதை நேசிக்க ஆரம்பிப்பதால், அவை அவர்கள் இருதயத்தை ஆட்கொண்டு விடுகின்து. இதனால் அவர்கள் இருதயம் உணர்வற்ற இருதயமாகவும் முள்ளுள்ள நிலத்தைப் போலவும் மாறிவி டுகின்றது. அந்த முள்ளுள்ள நிலத்திலே தேவனுடைய வார்த்தையானது விழுந்து முளைக்கின்றது, அதே வேளையிலே இந்த உலகத்தின் சிநேகமான முற்புதர்களும் முளைத்துக் கொண்டே இருக்கின்றது. அந்த முற்புதர்களை அவர்கள் மேன்மைப்படுத்துவதால், அவை சீக்கிரமாய் வளர்ந்து தேவ வார்த் தையை அகற்றி விடுகின்றது. இது தேவனுடைய சித்தமல்ல, அவரவர்களுடைய சொந்த தீர்மானத்தினால், உலக பொரு ட்களின் மேலுள்ள ஆசையினால் அவர்கள் தங்களை தாங்களே மய க்கிக் கொள்கின்றார்கள். பிரியமானவர்களே, உங்கள் இருதயத்தில் எத ற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கின்றது? உங்கள் கல்வி, வேலை, வீடுவாசல்கள், உடை ஆபரணங்கள், உல்லாசப் பயணங்கள் போன்ற வைகள் தேவனுடைய ஆலோசனைகளை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிடுகின்றதா? அல்லது தேவ ஆலோசனையின் வழியிலே, இந்த உலகத்திலே நமக்கு தேவையானவைகளை எடுத்துக் கொண்டு, தேவ வார்த்தையை மேன்மைப் படுத்துவதா? ஒருவன் இரண்டு எஜமானன னுக்கு ஒருபோதும் வேலை செய்ய முடியாது. அதாவது, ஒன்றில் உல கம் நம்முடைய எஜமானனாக இருக்கலாம் அல்லது தேவன் நம்முடைய எஜமானனாக இருக்கலாம். எனவே இந்த உலகத்தில் நன்மையாக தோன் றுபவைகளில் நாம் அன்பு கூராமால், நம்மை பரலோகம் சேர்க்கும்படி நம்மை தெரிந்து கொண்ட நம் தேவனாகிய கர்த்தரையே அன்பு செய்வோ மாக. தேவ வார்த்தைகளின்படி, இந்த உலகத்தை நாம் ஜெயங் கொண்டு, வாழ்வோமாக.
ஜெபம்:
அன்பின் தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் நன்மைகளை மேன்மைப்படுத்தி, அவைகளை பற்றிக் கொள்ளாமல், உம்மை பற்றிக் கொண்டு, மேலானவைகளை தேடும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:24-25