புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 14, 2023)

உறுதியாய் நிலைத்திருங்கள்

1 தெச 3:5

உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை (தீமோத்தேயுவை) அனுப்பினேன்.


ஒரு குறிப்பிட்ட தேசத்தின் போர்ச்சேவகர்கள், தங்கள் ராஜாவோடு ஒன்றுபட்டவர்களாய், தங்கள் தேசத்தை முற்றுகையிட வந்த எதிரிகளோடு தங்களுக்கிருந்த முழு பெலத்தோடும் நிலைத்திருந்து போராடி னார்கள். எதிரிகளின் வஞ்சகமான சூழ்ச்சிகளினால், பின்னிட்டு போகா மல், தாங் கள் ஆரம்பத்திலே கொண்ட வைராக்கியத்தைவிட்டு சற்றும் விலகிப் போகாதிருந்தார்கள். கிறிஸ்தவ வாழ்க்கையிலே நமக்கு போரா ட்டங்கள் உண்டு என்பதை நாம் யாவரும் கற்றிருக்கின்றோம். மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோ டும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலு ள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆதியிலே இருந்தது போலவே எதிரியாகிய பிசா சானவன் தன்னுடைய வஞ்சகமான தந்திரங்களினால் தேவ பிள்ளை களோடு போராட்டம் செய்கின்றான். இவையாவற்றையும் தேவ பிள்ளை கள் நன்கு அறிந்திருக்கின்ற போதிலும், உபத்திரவங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, தங்களுக்கு போராட்டங்கள் உண்டு என்பதையும், தங்களுடைய எதிரி யார் என்பதையும் சிலர் மறந்து போய்விடுகின்றா ர்கள். தேவ ஊழியராகிய பவுல், 'சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்ப டிக்கு, தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்' என்று தெசலோனிக்கேயாவிலுள்ள சபையோருக்கு கூறினார். பிசாசானவனிற்கு நம்மை ஜெயம் கொள்ள முடியாது அதனால், அவன் நாம் இருக்கும் இடத்திலேயே வஞ்சிக்கப்பட்டு போய்விடும்படிக்கு காதுகளுக்கு இனிமையான ஆலோசனைகளோடு நம்மிடத்தில் வருவான். பார்வைக்கு இச்சிக்கக்கூடிய காரியங்களுக்கு நம் கண்களை திருப்பும்படி எத்தனம் செய்வான். அவனுடைய வார்த்தைகள் நம் புத்தியை தெளிவிக்கின்றது போல இருக்கும். பிரியமானவர்களே, ஆதியிலே கொண்ட விசுவாசத்தை விட்டு வழுவிப்போகாமல், நல்ல போர்சேவகர்களைப் போல, உங்கள் நிலைப்பாட்டில், உறுதியாய் தரித்திருங்கள். எதிரியினால் உண் டாகும் உபத்திவரங்களை கண்டு கலங்காமல், எதிரியை ஜெயங் கொண்டு ஆண்டவர் இயேசுவை நோக்கிப் பாருங்கள். உபத்திரவங்க ளினாலே நீங்கள் அசைக்கப்படாதபடிக்கு; திடமனததுள்ளவர்களா யிருந்து, பெலவீனப்பட்டிருக்கும் மற்றய சகோதர சகோதரிக்கு மாதிரி யாய் வாழ்ந்து, விசுவாசத்தைப்பற்றி வாழும்படிக்கு அவர்களுக்கு புத்திசொல்லுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உபத்திரவங்களினாலே நான் அசைக்கப்படாமல், விசுவாசத்திலே நிலைத்திருந்து, எதிரியின் சூழ்ச்சிகளை இணங்கண்டு ஜெயங் கொள்ள பெலன் தந்து நடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 10:9-10