தியானம் (சித்திரை 13, 2023)
செய்கையும் விருப்பமும்
பிலிப்பியர் 2:13
ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
நண்பனே, உன்னுடைய சிறு வயதிலிருந்து உன்னையும் உன் குடுத்ப த்தினரையும் நான் அறிந்திருக்கின்றேன். நீ செய்து வரும் நன்மைகள் ஏராளம். துன்பத்தின் நாட்களிலும் ஆலயத்திற்கு தவறாமல் செல்வ தையும், தேவ காரியங்களிலே ஊக்கமாக ஈடுபடுபவதற்கும் நான் சாட் சியாக இருக்கின்றேன். நிச்சயமாக தேவன் உன் ஜெபத்தை கேட்பார் என்றான். அதற்கு அந்த விசுவாசியா னவன் மறுமொழியாக: அப்படியல்ல நண்பா, இவையெல்லாவற்றையும், நான் செய்வதற்கு தேவனே தம்மு டைய தயவுள்ள சித்தத்தின்படி விரு ப்பத்தையும் செய்கையையும் என் னில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். நான் தேவனுடைய சமுகத்திற்கு விண் ணப்பத்தோடும் வேண்டுதலோடும் செல்லும் போது, என்னுடைய கிரியை களை முன்னிட்டல்ல, அவருடைய கிரு பையின்படி எனக்கு மனதிரங்கும்படியே வேண்டிக் கொள்வேன் என்று பதில் கூறினான். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, இருளிலிரு க்கும் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கும்படி தேவனானவர் நம் ஒவ்வொருவரையும் ஏற்படுத்தியிருக்கின்றார். நம் அந்தரங்கமான ஜெப ங்களை கேட்டு, பிறருடைய வாழ்விலே விடுதலையை உண்டு பண்ணு கின்றார். அதே வேளையிலே வெளியரங்கமான நற்செயல்களையும் தான தர்மங்களையும் தேவன் நம் வழியாக நடத்தி வருகின்றார். அந்த வேளையிலே, நாம் இந்த உலகத்திலுள்ள மனிதர்களின் புகழ்ச்சிக்கு காரணராக மாறிவிடுகின்றோம். சில சமயங்களிலே அந்த புகழ்ச்சிகள் நமக்கு மனத்திருப்தியை உண்டாக்கிவிடுகின்றது. நாம் மற்றவர்களு டைய பார்வையிலே மேதாவிகளைப் போல எண்ணப்படாலாம். இவை யொன்றையும் நாம் நம்முடைய இருதயங்களிலே தங்குவதற்கு இடங் கொடுக்காமல், 'நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்ய வேண்டிய கடமை யைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்று ஆண்டவராகிய இயேசு நமக்கு கூறியிருக்கின்றார்;. தேவ சமுகத்திற்கு செல்லும் போது, தேவ கிருபையையே நாம் மேன்மைப் படுத்த வேண்டும். நாம் தேவனுடைய திருக்கரத்தின் கருவிகளாக இருப்பது நமக்கு உண்டான பெரிதான சிலாக்கியமாக இருக்கின்றது. நம்முடைய கிரியைகள் வழியாக பிதாவாகிய தேவனுடைய நாமமே மேன்மைபட வேண்டும். முதலாவதாக, அந்த மேன்மைப்படுத்துதலானது நம்முடைய இருதயத் திலிருந்து தாழ்மையோடு எழுந்து செல்ல வேண்டும்.
ஜெபம்:
என்னை உம் பிள்ளையாக தெரிந்து கொண்ட தேவனே, அற்பமான என்னையும் நீர் உம்முடைய திருகரத்தின் கருவியாக பயன்படுத்தி வருவதற்காக நன்றி. தொடர்ந்தும் நான் உம்மிலே நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - லூக்கா 17:10