புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 12, 2023)

யார் தகுதியுள்ளவன்?

யோவான் 10:9

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான்


மேற்கத்தைய நாடொன்றின் அதிகாரிகள், உலகத்திலுள்ள ஏனைய நாடுகளிலிருந்து மக்கள் தங்கள் நாட்டிற்குள் குடியேறுவதற்கான வழிமுறை களை ஒழுங்குபடுத்தினார்கள். அதன்படிக்கு, 1. தங்கள் நாட்டில் முன் கூட்டியே குடியேறியிருக்கும் தங்கள் சொந்த குடும்ப அங்கத்தவர்களை ஆதரிக்கவும், 2. அவரவர் தங்கள் சொந்த திறமை அடிப்படையிலே குடி யேறுவதற்கு தகுதியடைதல்;, 3. குலு க்கள் முறையிலே அதிஷ;ட இலாப சீட்டின் முறைப்படி தெரிந்து கொள்ளப்படுவதற்கும், 4. தங்கள் சொந்த தேசத்திலே வாழ் வாதாரத்தை இழந்து, அநாதர வாக விடப்பட்டிருப்பவர்கள் அகதிகளாக குடியேறுவதற்கும் அனு மதித்தார்கள். இவை யாவும் அநேகருடைய வாழ்விலே நன்மையையு ண்டாக்கியது. இப்படிப்பட்ட வழிமுறைகளை நாம் அழிந்து போகின்ற இந்த உலகத்தின் ராஜ்யங்களிலே காண்கின்றோம். ஆனால் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ள முடியும்? நான் இரட்சி ப்படைந்திருக்கின்றேன் ஆதலால் என்னுடைய பிள்ளைகளை நான் என்னோடு பரலோகத்திற்கு கொண்டு போக முடியுமோ? நான் ஒரு சன்மார்க்கன் என்னிடத்தில் எத்தனையோ நீதியின் கிரியைகள் உண்டு அதன் அடிப்படையில் நான் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளக் கூடுமோ? நான் எப்படியோ வாழ்ந்து வாழ்கின்றேன் அதிஷ;ட இலாபச் சீட்டின் குலுக்கள் முறையில் பரலோகத்திற்கு செல்ல முடி யுமோ? இந்த உலகிலே நான் தகுதியற்றவனாக, பாவியாக இருக் கின்றறேன், அதனால் நான் தகுதியடைய முடியுமோ? நம்முடைய உற வுகளின் படியுமல்ல, நம்முடைய நீதியின் கிரியைகளின் நிமித்தமுமல்ல, அதிஷ;ட இலாப குழுக்கள் முறையுமல்ல, ஆதரவற்ற நிலைமையுமல்ல. ஒருவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்று பிதாவாகிய தேவன்தாமே தம்முடைய ஏகசுதனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு தந்தருளினார். எந்த ஒரு மனிதனும், அவன் எப்ப டிப்பட்டவனாக இருந்தாலும், மீட்பர் இயேசுவை தன் சொந்த இரட் சகராக ஏற்றுக் கொண்டு, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை தன் வாழ்வில் நிறைவேற்றுபவனாக இருந்தால், அவன் பரலோக ராஜ் யத்தை சுதந்தரித்துக் கொள்கின்றான். எனவே, எந்த நிலைமையிலே நீங்கள் இருந்தாலும் பரலோகத்தின் வாசலாகிய இயேசுவை விசுவாசி யுங்கள். அவர் தரும் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுங்கள். பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

இரகத்தில் ஐசுவரியமுள்ள பரலோக தந்தையே, தகுதியற்ற என்னை, உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு வழியாக உம்முடைய ராஜ்யத்திற்கு பங்காளியாக மாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:6