புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 11, 2023)

என்னுடைய ரூபம்

கலாத்தியர் 6:4

அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்;


ஒரு ஊரிலே நடைபெற்ற சிரமதான சமூகப் பணிக்காக சில நண்பர்கள் கூடி உதவும்படியாக சென்றிருந்தார்கள். மாலையிலே வேலைகள் யாவும் பூர்த்தியாகின்ற வேளையிலே, அந்த நண்பர்களில் ஒருவன், மற் றய நண்பர்கள்; மிகவும் களைப்புற்று, அவர்கள் கைகளும், கால்களும், முக ங்களும், அணிந்திருந்த உடைகள் யாவும் அழுக்காவும் இருப்பதை கண்டு அவர்களை பார்த்து சிரித்தான். பின்னர் தன் வீட்டிற்கு சென்று, தன்னை கண்ணாடியிலே பார் த்த போதுதான் அவன் தன் அழுக்கான கோலத்தை கண்டு வெட்கமடைந்தான். இப்படியா கவே, மனிதர்கள் மற்றவர்க ளின் விவகாரங்களில் அதிக கவனத்தை செலுத்தும் போது, அவர்க ளுடைய குறைவு களை கண்டு கொள்கின்றார்கள். ஆனால், அவர்களோ தங்களைத் தாங்கள் ஆராய்ந்து பார்க்கத் தவறிவிடுகின்றார்கள். எங்கள் சரீரத்தின் கோலத்தை நாம் கண்ணாடியிலே பார்ப்பது போல, எங்கள் உள்ளான மனிதனுடைய நிலைமையை நமக்கு உணர்த்தி காண்பிக்கும் கண்ணாடியாக தேவனுடைய வார்த்தையானது இருக்கின்றது. அந்த வார்த்தையின் வெளிச்சத்திலே நாம் நம்மை நாள்தோறும் ஆராய்ந்து பார்த்து, வேதனையுண்டாக்கும் வழிகளை விட்டு விலக வேண்டும். அப் படி தன்னைத் தான் ஆராய்ந்து பார்க்காமல், மற்றவர்களுடைய நிலை மையை பார்க்கின்றவர்களின் நிலைமை எப்படியாக இருக்கின்றது? நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண் ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணி லிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? (மத்தேயு 7:2-4). வீட்டிலே மற்றய குடும்ப அங்கத்தினரின் குறைகள், வேலைத் தளத்திலே மற்ற ஊழியர்களின் குறைகள், சபையிலே மற்றய விசுவாசிகளின் குறைகள், நாட்டின் அதிகாரிகளின் குறைகள் போன் றவைகளே இன்று மனிதர்களுடைய பொதுவான சம்பாஷனைகளாக இருக்கின்றது. ஒருவேளை அவைகளில் உண்மை இருக்கலாம். ஆனால், அவைகளையே பேசிக் கொண்டிருப்பதால், மனிதர்கள் தங் கள் நிலைமையை அறியாதபடிக்கு வஞ்சிக்கப்பட்டு போய்விடுகின்றா ர்கள். எனவே எங்கள் ஆவிக்குரிய ரூபத்தை தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் அனுதினமும் ஆராய்ந்து பார்த்து, தேவ சாயலிலே வளர்ந்து பெருகுவோமாக.

ஜெபம்:

என் யோசனைகளை அறிந்த தேவனே, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே என்னையே நான் ஆராய்ந்து பார்க்கின்றவனாக இருக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 13:5