புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 10, 2023)

கர்த்தருடைய வேளைக்காக காத்திருங்கள்

2 பேதுரு 3:9

ஒருவரும் கெட்டுப்போ காமல் எல்லாரும் மனந் திரும்பவேண்டுமென்று விரும்பிஇ நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.


நீண்ட நாட்களுக்குப் பின்னர் குறிப்பிட்ட ஒரு பட்டணத்திற்கு செல்லும்படிக்கு, ஒரு குடும்பத்தினர், காலையிலே நேரத்தோடு இரயில் நிலை யத்திற்கு சென்றிருந்தார்கள். அவர்கள் வசித்து வந்த கிராமத்திலிருந்து, பட்டணம் மிகவும் தொலைவிலுள்ளதால், அங்கிருந்து இரயிலானது கிழமைக்கு ஒரு முறையே சென்று வந்தது. பயணிகள் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் அதிக நேரமாகக் காத்தி ருந்தார்கள். குறிப்பிட்ட குடும்பத்தின ரோ அதிகாலையில் வேளையோடு அங்கே சென்றிருந்ததால், பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டு இரயிலிலே ஏறிக் கொண்டேயிருந்தார்கள். பிள்ளைகளின் உள்ளத்திலோவென்றால் மிகவும் பரவசம். இரயில் எப்போது கிளம்பும் என்றும், ஏன் பயணிகள் தாமதமாகின்றார்கள் என்றும், பொறுமையிழந்தவர்களாக அடிக்கடி பெற் றோரை கேட்டுக் கொண்டார்கள். மற்ற ஜனங்களும் இரயிலில் பயணம் செல்ல வேண்டும் எனவே பொறுமையாக இருங்கள் என்று பெற்றோர் பிள்ளைகளை அமைதிப்படுத்தினார்கள். ஆம் பிரியமானவர்களே, நாம் கர்த்தரை அறிந்து, இரட்சிக்கப்பட்டு அநேக காலங்கள் கடந்திருக்க லாம். ஆனாலும் நாமும் அந்தச் சிறு பிள்ளைகளைப் போல, கர்த்தர் எப்போது வருவார்? ஏன் தாமதிக்கின்றார் என்று பல கேளவிகளை மனிதர்கள் கேட்பதுண்டு. மேலும், நாம் நற்செய்தியை கேட்டும் உணர்வற்றி ருக்கின்றவர்களை குறித்து மனதில் எரிச்சல் அடைவதால், சிலவேளைகளிலே விசுவாசிகளாகிய நாம் மற்றவர்களை நியாயந்தீர்க்கின்றவர் களாக மாறிவிடுகின்றோம். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். நாமும் ஆண்டவர் இயேசுவை அறிய வேண்டிய பிரகாரம் அறியாமல் அலைந்த நாட்கள் உண்டு. அறியாமையின் நாட்களிலும், மனக்கடினத்தில் வாழ்ந்த நாட்களிலும் கர்த்தர் தம்முடைய கிருபையை நம்மேல் பொழிந்தாரே. நாம் நிர்மூலமாகாதபடிக்கு நம்மை அவர் காத்துக் கொண்டார். இப்பொழுது நாங்கள் கூறுவதை மற்றவர்கள் உடடினடியாக செவிகொடுக்க வேண்டும் என்ற மனநிலைமையை களைந்து விட்டு, நீடிய பொறு மையுள்ளவர்களாக, மற்றவர்களுடைய இரட்சிப்புக்காக விசுவாசத்தோடு கூடி ஜெபத்தோடு காத்திருப்போம்.

ஜெபம்:

இரட்சிப்பின் தேவனே, என்மேல் நீர் நீடியபொறுமையுள்ளவராக இருந்தீர். அதுபோலவே, உம்மை அறியாத மற்றவர்களை நான் நியாயந்தீ ர்க்காமல் அவர்களின் இரட்சிப்புக்காக காத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:1-8