தியானம் (சித்திரை 08, 2023)
கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்
2 கொரிந்தியர் 2:15
நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.
ஜனங்களெல்லாரும் பரபாசை விடுதலையாக்கும்! விடுதலையாக்கும்! என்று சத்தமிட்டுக் கேட்டார்கள். இயேசுவையோ சிலுவையில் அறை யும்! சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள். பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித் தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான். ஆனால் தேவ மைந்தனாகிய இயேசுவோ நன்மை செய்கின்றவராக சுற்றித்திரிந்தார். இருளிலிருக்கும் ஜனங்கள் வெளிச்சத்தை காண வேண் டும் என்றும், மனதின் குருடாட்டத் திலே கட்டப்பட்டிருக்கின்றவர்கள் தங் கள் மனக் கடினத்தினால் அழிந்து போகாதபடிக்கு அவர்களின் பரிதாப நிலைமையை அவர்களுக்கு அறிவித் தார். ஆனாலும் அவர்களோ, பரிசுத்த மும் நீதியுமுள்ளவரை மறுதலித்து, கொலைபாதகனை தங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு, ஜீவாதிபதியைக் கொலை செய்தார்கள். அப்படியிருந்தும், அன்புள்ள மீட்பராகிய இயேசு அவர்க ளுடைய பாவங்களையும் தன்மேல் சுமந்து கொண்டு, அவர்களு க்காக பிதாவாகிய தேவனிடம் பரிந்து பேசினார். அன்று மட்டுமல்ல, இன்றும் கூட கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து, மற்றவர்களுக்க நன்மை செய்ய விரும்புகின்றவர்களை மனிதர்கள் புறக்கணிக்கின் றார்கள். நண்பர்கள், உறவினர், சக வேலையாட்கள் முன்னிலையிலே ஆகாத வார்த்தைகளை பேசினாலும் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவின் நாமத்தையும் இரட் சிப்பையும் பேசுவது தங்களுக்கு இடறல் என்று முறையீடு செய்கின் றார்கள். காரியம் அப்படியிருந்தாலும், நாம் நன்மை செய்வதிலிருந்து ஓய்ந்து விடுதல் சரியாகுமா? கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கா மல் இருப்பது நியாயமாகுமா? இல்லை! நாம் அப்படியிருக்கலாகாது. கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல் லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்க ப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். பிரியமா னவர்களே, உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படு ம்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். (1பேதுரு 4:12-13)
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவங்களை கண்டு கலக்கமடையாமல், நித்திய கனமகிமையை நோக்கி முன்னேறிச் செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 கொரி 4:8-10