புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 07, 2023)

விலையேறப் பெற்ற இரத்தம்

யோவான் 12:47

நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.


பாவத்திலே கையும் களவுமாக பிடிப்பட்ட ஸ்திரியை கல்லெறிந்து கொல்லும்படிக்கு ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் கொண்டு வந் தார்கள். பரிசுத்தராகிய இயேசுவை சோதித்து அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படிக்கு அவரை நோக்கி: போதகரே, இந்த ஸ்திரீ விப ச்சாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்ட வர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிர மாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவரோ அவர்களை நோக்கி: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவன் என்று சொன்னார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சி யினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரி யோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ் வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு அவளை நோக்கி: ஸ்திரீயே, உன்மேல் குற்ற ஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள் ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்ட வரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினை க்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என் றார். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, பாவமில்லாத இயேசு ஏன் அப்படி சொன்னார்? (யோவான் 8:46, லூக்கா 1:35, எபிரெயர் 4:15, 1 யோவான் 3:5). தேவ மைந்தனாகிய இயேசு, இந்த உலகத்திலுள்ள வர்களின் பாவங்களின் நிமித்தம் அவர்களை நியாயந்தீர்க்கவராமல், அவர்களை பாவத்தினின்று இரட்சிக்கும்படிக்கே வந்தார். அந்த ஸ்திரியின் மரணத்திற்கேதுவான பாவத்தை தன்மேல் ஏற்றுக் கொண்டு, அவளை மன்னித்து அவளுக்கு மறுவாழ்வைக் கொடுத்தார். அவளுக்கு மாத்திரமல்ல, நம்முடைய மீறுதல்களையும் தம்மேல் சுமந்து கொண்டு, கோரமான சிலுவையிலே தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்தார். நம க்கு மட்டுமல்ல, தம்மை விசுவாசிக்கின்ற யாவருக்கும் பாவ மன்னிப் பை கொடுக்க சித்தமுள்ளவராக இருக்கின்றார். நம்முடைய பாவங் களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவ ங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். எனவே, விலையேறப் பெற்ற இரத்தினால் உண்டாகும் மீட்பை இன்றே பெற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக பிதாவே, நான் கெட்டுப்போகமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உம்முடைய திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் வழியாக உண்டாகின இரட்சிப்புக்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 19:10

Category Tags: