புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 05, 2023)

உணர்வுள்ள இருதயம் தேவை

யோவான் 12:37

அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.


ஒருமுறை, இருமுறையல்ல, எத்தனை நன்மைகள் செய்தாலும், நல்லதுக்கு காலம் இல்லை. தாம் பெற்றவைகளைக் குறித்த நன்றியறிதலுமி ல்லை, அப்பா எப்படியாவது தேவைகளை சந்திப்பார் என்ற நம்பிக்கையுமில்லை என்று தன் குடும்பத்தின் நிலைமையைக் குறித்து ஒரு தகப்பனானவர் தன் மேய்ப்பனிடம் கூறினார். இவ்வண்ணமாக தீர்க்கதரிசியாகிய மோசேயின் நாட்களிலே, தேவனுடைய ஜனங்கள், எகிப்திலும், வனாந்திரத்திலும், கர்த்தரின் அதிசயமான செயல்களையும், அற்புத அடையாளங்களையும், பலமுறைகள் கண்ணாரக்கண்டும், தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசம் வைக்காமல், நன்றி யற்றவர்களாக அவரை பத்துமுறை பரீட்சை பார்த்தார்கள். தேவனாகிய கர்த்தரால் உண்டாகும் இளைப்பாறுதலை வெறுத்துத் தள்ளி, அழிவை தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். அவ்வண்ணமாகவே, ஆண்டவ ராகிய இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலும், அவர் ஜன ங்கள் முன்னிலையில், உலகமுண்டானதுமுதல் மனிதர்கள் காணாத எத் தனையோ அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்களோ அவரை விசுவாசிக்கவில்லை. வேத வாக்கியங்களை ஆரா ய்ந்து பார்த்து, தங்கள் முன்னிலையிலே நிற்பவர் வாக்களிக்கப்பட்ட மீட்பர் என்பதை அறிந்து கொள்ள மனதில்லாமல், உணர்வற்ற வாழ் க்கை வாழும்படிக்கு தங்கள் இருதயத்தை தாங்களே கடினப்படுத்திக் கொண்டார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய கர்த் தராகிய இயேசுவின் பாடுகளை அதிகதிகமாக தியானம் செய்யும் இந்த பரிசுத்த வாரத்திலே, நாம் நம்முடைய இருதயத்தின் நிலைமையை கர்த்தருடைய வார்த்தையின் வெளிச்சதில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்ட ஞான நன் மைகளை அற்பமாக எண்ணி, அவைகளைத் தள்ளிப்போடாமல், பெற்ற நன்மைகளுக்கு நன்றியறிதலுள்ளவர்களாக இருக்க வேண்டும். அந்த நன்றியானது, நாம் தேவன்மேல் கொண்ட விசுவாசத்தை இன்னுமாய் உறுதிப்படுத்த வேண்டும். வாழ்க்கையிலே போராட்டங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, விசுவாச அறிக்கையிலே உறுதியாய் நிலைத்திரு ங்கள். அந்த நாட்களிலே அழைப்பைப் பெற்ற ஜனங்களில் பலர் மதியீனராக இருந்தது போல, நாமும் இந்த நாட்களிலே இருக்காமல். உணர்வுள்ளவர்களாக கர்த்தரிலே நிலைத்திருப்போமாக.

ஜெபம்:

இருதயங்களை பிரசகாசிப்பிக்கின்ற தேவனே, நான் உணர்வற்ற வாழ்க்கை வாழாதபடிக்கு, எப்போதும் நன்றியறிதலுள்ளவனாக, உம்மை நம்பி, உம்மையே சார்ந்து வாழும் வாழ்க்கை வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மீகா 6:3