புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 03, 2023)

நாம் ராஜாக்களும் ஆசாரியர்களும்

யோவான் 12:26

ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்கிறவனானால் என்னைப் பின் பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்


ஒரு நாட்டின் இளவரசன், வளர்ந்து பெரியவனானபோது, ராஜ குல த்தின் பிறப்புரிமையால் தனக்கு உண்டாயிருக்கும் கனத்தையும், மகி மையையும், வல்லமையையும். ஐசுவரியத்தையும் கண்டு பெரு மகிழ்ச்சியடைந்தான். தன் விவகாரங்களை நேர்த்தியாக கவனிப்பதற்கு ஊழி யகாரர்களும், ஊழியக்காரிகளும் ஏராளமாக இருக்கின்றார்கள். இப் படிப்பட்ட சிலாக்கியத்தை பெற்ற நான் பாக்கியம் பெற்றவன் என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டான். ஒருவேளை அந்த இளவரசன், தேசத்தின் குடிகளுக்கு அவ்வப்போது தன் இரக்கத்தையும், மனதுருக்கத்தையும் சில செயல்கள் வழியாக காண்பிக்கலாம். ஆனால், நம்முடைய தேவ குமாரனாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து, வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் உடையவராக, தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாய லானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். மனித குலம் நித்திய ஆக்கினைக்குள் அழிந்து போகாமல், நித்திய ஜீவனைப் பெறும்படி அப்படிச் செய்தார். நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார். எனவே நாமும், ஆசீர்வாதம் என்ற போர்வையின் கீழே, இந்தப் பூவுல பொக்கிஷங்களால் உண் டாகும் சௌகரியம் நிறைந்த வாழ்க்கையை வாஞ்சித்து அதன் பின் தொடராமல், கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்தவர்களாக, அவரைய பின்பற்றிச் செல்வோமாக. அவர் எப்படியாக சுயநலமற்ற தியாகமான வாழ்க்கையை இந்தப் பூவுலகிலே வாழ்ந்து காட்டினாரோ, அதுபோல நாமும், நமக்குரியவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவோமாக. நித்திய பேரின்பத்திலே பிரவேசித்து, மகிமையின் கீரிடத்தை சூடும் நாள்வரைக்கும், கிறிஸ்துவின் நல்ல ஸ்தானாதிபதிகளாக வாழ்ந்து இந்த உலகத்திலே அவரை, நம் வாழ்கை வழியாக மற்றவர்களு க்கு வெளிப்படுத்துவோமாக.

ஜெபம்:

தம்முடைய சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் என்னில் உண்டாக்குகிறவராயிருக்கின்ற தேவனே, நான் மகிமையில் சேரும் நாள்வரைக்கும் மனத்தாழ்மையோடு பணி செய்ய கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:12