புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 01, 2023)

கற்றுக் கொள்ள ஆயத்தமா

பிலிப்பியர் 4:13

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.


ஒரு கிராமத்திலே வசித்து வந்த இளைஞனொருவன், அருகிலுள்ள பட்டணத்திலே நடைபெறும் நீச்சல் பந்தையப்போட்டியை பார்க்க சென் றிருந்தான். அந்தப் பந்தையப் போட்டியிலே போட்டியிடும் வீரர்களின் நீச்சல் திறனைக் கண்டு, அதிசயித்த அவன், தானும் நீச்சல் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தன் மனதிலே உறுதியான தீர்மானம் செய்து கொண்டான். கிராமத்தி ற்கு திரும்பிய அவன், தன் அய லிலே வசித்து வந்த நீச்சல் கலை யை அறிந்த ஒருவரிடம் சென்று, தனக்கு நீந்த கற்றுக் கொடுக்கு ம்படி கேட்டுக் கொண்டான். அவ ரும், அந்த கிராமத்திலுள்ள ஆற் றிலே, அவனுக்கு ஆரம்ப நீச்சல் கலையை கற்றுக் கொடுத்து வந் தார். அந்த இளைஞனும் அனுதினமும், தான் கற்றுக் கொண்டதை விடா முயற்சியுடன் பயிற்சி செய்து நீச்சல் கலையிலே முன்னேறி வந்தான். ஆம் பிரியமானவர்களே, ஒருவன் ஒரு காரியத்தை கற்றுக் கொள்ள வேண்டுமாயின், 1. கற்றுக் கொள்ளப்போகின்றேன் என்ற தீர்மானம் மன திலே உண்டாக வேண்டும். 2. அந்த காரியத்தை கற்றுக் கொடுக்க ஒரு பயிற்சியாளர் இருக்க வேண்டும். 3. கற்றுக் கொண்டவைகளை தவ றாமல் பயிற்சி செய்ய வேண்டும். தேவ ஊழியராகிய பவுல், தன்னு டைய அனுபவங்களை குறித்து கூறும் போது, நான் எந்த நிலைமை யிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் 'கற்றுக்கொண்டேன்' என்றும், தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரி யும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினி யா யிரு க்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் 'போதிக்கப்பட்டேன்' என்றும் கூறியிருக்கின்றார். நாம் எந்த வயதுடையவர்களானாலும் கிறி ஸ்துவோடு வாழும் வாழ்க்கையிலே, அனுதினமும் நாம் கற்றுக் கொள் ளும்படிக்கு நம்மை நாம் தாழ்த்த வேண்டும். போதக சிட்சையை அற்ப மாக எண்ணாமல், கிறிஸ்துவின் சாயலையடைய முடியாதபடிக்கு தடையாக இருக்கும் சுபாவங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய சுயபெலத்தினால் உண்டாகும் பலன் அற்பமே. ஆனால், நாம் நம்மை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியில் வாழ நம்மை ஒப்புக் கொடுத்து, மனத் தாழ்மையோடு போதனைகளை ஏற்றுக் கொண்டு நடக்கும் போது, அவர் நமக்கு பெலன் தந்து வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

கற்றுத் தந்து நடத்தும் தேவனே, எந்த சூழ்நிலையும் என்னை மேற்கொள்ளாதபடிக்கு, நான் உம்மிலே நிலைத்திருக்கும்படிக்கு உம்முடைய வார்த்தையின் வழியிலே வாழ நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 16:13