புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 31, 2023)

மேலான வாஞ்சை

எபேசியர் 1:4

அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,


தாயின் கருவினிலே பிள்ளை உருவாகிற்று என்று நிச்சயிக்கப்பட்ட பின்னர், பெற்றோர் தங்கள் பிள்ளையைக் குறித்த பல ஆயத்தங்களைச்; செய்கின்றார்கள். சிலர் தங்கள் பிள்ளையின் எதிர்காலத்தைக் குறித்து பற்பல திட்டங்களை செயற்படுத்துகின்றார்கள். சில நாடுகளிலே, பிள்ளை பிறந்த ஒரு சில மாதங்களுக்குள்ளேயே, பிள்ளையானது பல்கலை க்கழகத்தில் படிக்க தேவையான பணத்தை சேகரிக்கின்றார்கள். இப் படியாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நலனுக்கென்று ஆயத்தம் செய்யும் காரியங்களுக்கு முடிவி ல்லை. சில வேளைகளிலே, பெற்றோரிடம் வசதிகள் இல்லாவிட்டாலும், தங்கள் பிள்ளைக ளின் நலனை குறித்த எண்ணங்கள் பெற்றோரின் மனதிலே அநேகமாயிருக்கும். இவைகளிலே வாழும் ஊர், வீடு, கல்வி, கல்வி கற்கும் பாடசாலை என்ற பட்டியலானது பெற்றோரின் வசதிகளுக்கேற்ப நீண்டு கொண்டே செல்கின்றது. இப்டியாக பெற்றோர் தங் கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க எப்போதும் சித்தமுள்ள வர்களாகவே இருக்கின்றார்கள். ஆனால் ஒரு பிள்ளையானது இந்த உலகத்திலே பிறக்கின்ற போது, என்னுடைய பிள்ளை தேவனுடைய சித் தத்தை இந்தப் பூமியிலே செய்ய வேண்டும். என்னுடைய பிள்ளை நித் திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும் என்று வாஞ்சையாக இருக்கும் பெற்றோர் எத்தனை பேர்? பரலோகத்திற்குரிய மேலானவை களை என்னுடைய பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மன விருப்பத்தோடு, தேவனை வேண்டிக் கொள்ளும் பெற்றோர்கள் எத்த னை பேர்? நாம் அழியாமையை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும் என் பதே நம்மைக் குறித்த பிதாவாகிய தேவனுடைய சித்தமாயிருக் கின் றது. நாம் இந்தப் பூமியிலே பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு, நம்மை தாயின் கருவினிலே பிரித்தெடுத்தார். அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன். ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளு கிறேன் என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். விசுவாச மார்க்கத்தராகிய பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் கல்வி, தொழில் முன்னேற்றத்திற்காக வாஞ்சையோடு உபவாசித்து ஜெபிக்கின்றார்கள். அதைவிட மேன்மையாக எங்களுடைய பிள்ளைகள், பரிசுத்த ஆவி யினால் நடத்தப்பட வேண்டும். இயேசு கிறிஸ்துவின் சாயலிலே வளர வேண்டும். பிதாவின் சித்தத்தை செய்ய வேண்டும். நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாஞ்சையுள்ளவர்களாக அவர் களை வழிநடத்தி செல்லக் கடவோம்.

ஜெபம்:

உமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்ற மில்லாதவர்களுமாயிருப்பதற்கு நம்மை பிரித்தெடுத்த தேவனேஇ உம்மு டைய அநாதி தீர்மானம் என்னில் நிறைவேறும்படி நான் வாஞ்சிக் கின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:13