புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 30, 2023)

அசையாத நம்பிக்கை

சங்கீதம் 62:8

ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;


தன் மகளானவள், திருமணமாகி அவளுடைய கணவனோடு வாழும்படிக்கு செல்ல வேண்டிய நாள் அண்மித்த போது, தந்தையானவர் தன் மகளை அழைத்து அவளை நோக்கி: மகளே, நான் இந்த உலகத்தின் அளவுகோலின்படி பெரும் செல்வந்தனல்ல. ஆனால், நீ பிறந்த நாளிலிருந்து, என்னால் முடிந்த அளவிற்கு எதையெல்லாம் உனக்கு செய்தேன். என்னிடத்திலிருக்கின்ற ஒரு நன்மையையும் நான் உனக்கு மறைத்து வைத்ததுமில்லை. நாளை க்கு நீ உன்னுடைய வாழ்க்கையிலே ஒரு புதிய அத்தியாத்தை ஆரம்பி க்கின்றாய். நீயும் உன் கணவனும் இன்று நன்றாக கல்வி கற்றிருக்கின்றீர்கள், வசதியுள்ளவர்களாக உங் கள் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றீர்கள். நாளை உங்களுடைய நிலைமை இன்னதென்பதையும், இனிவரும் ஆண்டுகளிலே நீங்கள் இருவரும் சந்திக்க வேண்டிய சவால்களையும் நீங்கள் அறியமாட்டீர் கள். ஆனால் ஒன்றைமட்டும் அறிந்து கொள்ளுங்கள்: 'கர்த்தர் வீட் டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா. கர்த் தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.' என் னுடைய பிரயாசம் விருதாவாய் போகாதபடிக்கு கர்த்தர் என் கரத்தின் கிரியைகளை ஆசீர்வதித்தார். நான் என் கிரியைகளின் பலனையல்ல, கர்த்தரையே இன்னும் அதிகமாக இறுகப் பற்றிக் கொண்டேன். நீ நல்ல வாழ்;க்கை வாழ வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன். அதை நீ விரும்பினால், நீ எக்காலத்திலும் கர்த்தரை நம்பு. உன் இருதயத்தை அவர் சமுகத்தில் ஊற்றிவிடு. அவரே என் அடைக்கலம் என்று அறி க்கை செய்து அவருடைய வார்த்தையின் வழியிலே வாழ்க்கை நடத்து. நீ எதை மறந்து போனாலும், நான் இன்று உனக்கு கூறியதை மறந்து போய் விடாதே என்று அறிவரை கூறினார். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, சமாதானமான வாழ்க்கையை கண்டடையும்படிக்கு மனிதர்கள் பல வழிகளிலே பிரயாசப்படுகின்றார்கள். ஆனால், அவர்களுடைய வாழ்க்கையிலே கர்த்தர் இல்லையென்றால், அவர்கள் காரி ருளிலே வழியறியாதவர்களைப் போல தத்தளிக்கின்றவர்களாக இருப்பார்கள். கர்த்தரை நம்பியிருக்கின்றவர்களோ, எந்த சூழ்நிலைகளினா லும் அசைக்கப்படுவதில்லை. கர்த்தர்தாமே அணையாத தீபத்தை அவர்கள் உள்ளத்திலே ஏற்றியிருக்கின்றார். ஆபத்தை கண்டு அவர்கள் அஞ் சுதில்லை. அவர்களுடைய நம்பிக்கை கர்த்தரிலே இருப்பதினால், அவ ருடைய சமாதானம் அவர்களில் எப்போதுமே நிலைத்திருக்கின்றது.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, அநித்தியமான இந்த உலகத்தின் காரியங்களில் நம்பிக்கை வைக்காமல், உம்மையே நான் என் நம்பிக்கையாக கொண்டிருக்க, பிரகாசமுள்ள மனக் கண்களை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33