தியானம் (பங்குனி 29, 2023)
முதன்மையானது என்ன?
எபிரெயர் 13:6
கர்த்தர் எனக்குச் சகாயர்,
என் பெற்றோரானவர்கள் விட்ட குறையை நான் விடப்போவதில்லை. என் பிள்ளைகள் எப்படியாவது கல்வி கற்கும்படி அதற்கு வேண்டிய யாவற்றையும் நான் செய்து கொடுப்பேன். நான் விட்ட குறையை என் பிள்ளைகள் விடாதபடிக்கு, அவர்கள் வீட்டில் படிக்கின்றார்களாக, என்ப தில் நான் கருத்துள்ளவனாக இருப்பேன் என்று ஒரு விசுவாசியானவன், தீர்மானம் செய்து கொண்டான். அவன் தீர்மானம் செய்ததுபோல, பல சவால் கள் மத்தியிலும், அவன் கிரியை நடப்பித்தான். பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தான். ஆண்டுகள் கடந்து சென்ற பின்னர், படித்து பட்டம் பெற்ற பிள்ளைகள், கைநிறைய உழை த்தார்கள். தன் பிரயாசம் விருதாவாய்ப் போகவில்லை என்று தந்தை யாகிய அந்த விசுவாசியானவன் மகிழ்ச்சியடைந்ததான். ஆனால், கால ங்கள் கடந்து சென்றதும், தன் பெற்றோர் விடாத மகா பெரிய தவறை தான் தன் பிள்ளைகளின் வளர்ப்பில் செய்துவிட்டதை உணர்ந்து மன வேதனையடைந்தான். அதாவது, அந்த விசுவாசியானவனுடைய பெற் றோர், எளிமையான வாழ்க்கை வாழ்ந்த போதும், 'கர்த்தரே தம்முடைய சகாயர்' என்பதை அவனுக்கு அருமையாக கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் அவனோ, தன் பிள்ளைகளின் வாழ்க்கையிலே உலக கல்வியை கற்க வசதிகளை செய்து கொடுத்து, அவர்களை மேதாவிகளாக்கியது உண்மை. ஆனால், வாழ்வில் என்ன நடந்தாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், அவர்கள் தேவனில் தங்கி வாழ வேண்டும் என்பதை அவர்களுக்கு அவன் கற்பிக்க வேண்டிய வயதில் கற்றுக் கொடுக்கா மல் போனதினால், அவர்கள் தங்கள் கையின் பிரயாசத்தையே வாழ் வின்; முதன்மையானதாக எண்ணிக் கொண்டார்கள். பிரியமானவ ர்களே, நாம் கல்வி கற்பதும், உழைப்பதும், பாதுகாப்பான உறைவிட த்தை கட்டிக் கொள்ளுவதும் நல்லது. ஆனால், நாம் பிரதானமாக அறி ந்து கொள்ள வேண்டியதாவது, பரம பிதா நம்மை பிழைப்பூட்டுகி ன்றார், அவரே நம்முடைய சகாயர். நாம் எந்த வைத்தியத்தை செய் தாலும், சுகத்தை கட்டளையிடுகின்றவர், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே. நாம் எப்படிப்பட்ட கடற்கோட்டை கட்டி அதனுள்ளே வாழ்ந்தாலும், கர்த்தரே நம்முடைய உயர்ந்த அடைக்கலமானவர் என் பதை ஒரு போதும் மறந்து போய்விடக்கூடாது. இந்த பூமியிலே வாழும்வரை நாம் பல காரியங்களை நாளாந்தம் செய்து வருகின்றோம். அவை யாவற்றிற்கும் மேலாக கர்த்தரே எனக்கு சகாயர் என்பதே முதன்மையனாதும், அடித்தளமானதுமாக கொண்டு வாழ்வோமாக.
ஜெபம்:
உன்னதமான என் தேவனாகிய கர்த்தாவேஇ நீரே என் அடை க்கலமும்இ கோட்டையுமானவர் என்பதை அறிக்கை செய்துஇ சர்வ வல்ல வராகிய உம் நிழலிலே தங்கி வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 127:1-6