புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 26, 2023)

ஒரு போதும் கைவிடார்

சங்கீதம் 37:39

நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.


வாழ்க்கையிலே பல தொல்லைகளும் கஷ;டங்களும் ஒன்றின்பின் ஒன்றாக வந்த நாட்கள் இருந்தது. இவை எப்படியாக முடியுமோ என்று கவலையடைந்த நேரங்களில், எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது என்று தேவனை நோக்கி புலம்பிய நாட்களில், தம்முடைய செட்டைகளின் நிழ லிலே அடைக்கலம் தந்து, கார் மேக ங்களைப் போல சூழ்ந்து கொண்ட தொல்லைகள் கஷ்டங்கள் ஒவ்வொ ன்றையும், ஒன்றின்பின் ஒன்றாக மேற்கொள்ளும்படிக்கு தேவனான வர் அதிசயமாக வழிநடத்தி வந் தார். இது என்னுடைய அனுபவ சாட்சி என்று ஒரு விசுவாசியான வன் தேவனைக் குறித்து மனமகிழ்ச்சியுள்ளவனாக இருந்தான். புலம் பலின் நாட்கள் கடந்து போய்விட்டது. அதன் பின்னர் வாழ்க்கையிலே பிரச்சனைகள் சூழ்ந்து கொள்ளும் போது, எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பி டுவேன் என்ற அறிக்கை நாவில் இருந்தது. ஆண்டுகள் கடந்து சென்று, தேவனை அறிகின்ற அறிவிலே இன்னுமாய் வளர்ந்து வந்தபோது, இக் கட்டும் நெருக்கங்களும் அலையலையாய் வந்து, வாழ்க்கைப் படகில் மோதிக்க கொண்டாலும், பிரச்சனைகளின் மத்தியிலும் 'கர்த்தர் நல் லவர் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது' என்று துதி அவன் இருதயத்திலிருந்து எழுந்தது. பிரியமானவர்களே, 'நீதிமான்களுடைய இரட்சி ப்பு கர்த்தரால் வரும்; இக்க ட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்' எப்படியாக நீங்கள் அறிக்கையிடுகின்றீர்கள் என்பதை சிந் தித்துப் பாருங்கள். புலம்பலுடன் கூறுகின்றீர்களா? மனக் குழப்பத்துடன் கூறுகின்றீர்களா? அல்லது அசையாத நம்பிக்கையோடு அறிக்கையிடு கின்றீர்களா? சிந்தித்துப் பாருங்கள். தேவனை அறிகின்ற அறிவிலே நாம் நாள்தோறும் வளர்ந்து பெருகின்றவர்களாக இருக்க வேண்டும். நேற்றைய நாளைவிட இன்று நாம் தேவனை அறிகின்ற அறிவிலே வளர்ந்தவர்களாக காணப்படவேண்டும். இன்றைய நாளைவிட நாளைய நாளிலே, அந்த அறிவிலே இன்னும் பெருகின்றவர்களாக நாம் முன் னேறிச் செல்ல வேண்டும். போராட்டங்கள் மனதைக் கலங்கப்பண்ணும் போது, கடந்த நாட்களில் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து, அவ ருடைய மாறாத கிருபைகளுக்காக அவரைத் துதியுங்கள். பரம தந்தை யாகிய தேவன் நம்மை ஒருபோதும் கைவிடார். அவர் தம்முடைய பிள் ளைகளுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்

ஜெபம்:

இளைப்பாறுதல் தரும் தேவனே, என்னை சூழ்ந்து கொள்ளும் பிரச்சனைகளை கண்டு நான் கலங்கி தவிக்காதபடிக்கும், உம்முடைய வார்த்தையை அறிக்கையிடுகின்றதில் உறுதியாய் இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28