புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 25, 2023)

இருதயத்தின் தியானங்கள்

சங்கீதம் 1:2

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்


தன் மகனானவனோடுகூட மரங்களை வெட்டும்படி காட்டிற்கு சென்ற தகப்பனானவன், எப்படி மரங்களை துரிதமாகவும், நேர்த்தியாகவும் வெட் டுவதென்று தன்னுடைய மகனானவனுக்கு கற்பித்துக் கொடுத்தான். தகப்பனானவர் மிகவும் உரமாக மரங்களை வெட்டுவதைக் கண்ட மகனானவன், அதன் இரகசியம் என்ன என்று கேட்டான். அதற்கு தகப்பனானவர்: மகனே, எதை குறித்து அல்லது யாரைக் குறித்து நீ கோபமாக இருக்கின்றாயோ, அதை அல்லது அவர்களை மனதிலே நினைத்துக் கொண்டு, அந்த கோபமனைத்தையும் உன் பெலனாக மாற்றி, மர த்தை வெட்டு என்று கூறினார். சண்டைப் பயிற்சியை கொடுப்பவர்கள் இதுபோன்ற அறிவுரைகளை கொடு ப்பதை ஒருவேளை நீங்கள் கேட்டிருக்கலாம். இத்தகைய முறைமையில் உண்மை இருக்கின்றதோ இல்லையோ என்பது தெரியாது ஆனால், இப்படியாக தங்கள் வேலைகளை செய்பவர்கள், தங்கள் மாம்சமான எண்ணங்களுக்கு பயிற்சி கொடுத்து, தங்களுக்குள் மறைந் திருக்கும் மாம்சமான மனிதனை பெலப்படுத்தி அவனை பராக்கிரமசா லியாக மாற்றிவிடுகின்றார்கள். இவ்வாறாகவே மனிதர்கள் தங்கள் கோபங் களையும் வெறுப்புக்களையும் மேற்கொள்ளும்படி வழிமுறைகளையும் கூறுகின்றார்கள். ஆனால், இவ்வாறான வாழ்க்கையானது, தேவனு டைய பிள்ளைக்குரிய வாழ்க்கை முறைமை அல்லவே. தேவனாகிய கர்த்தர்தாமே, தம்முடைய ஜனங்களுக்கு ஆசீர்வாதத்திற்கான வழி முறைகளை சொல்லிக் கொடுத்திருக்கின்றார். பூமியிலே நல்ல நாட்களை காணும்படிக்கு, நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதய த்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக் குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக என்று கூறியிருக்கின்றார். எனவே, நாம், நம் மனதில் மாம்ச எண்ணங்களை பதித்து வைக்காமல், தெய்வீக சுபா வங்கள் வளர்க்கும்படிக்கும், உள்ளானமனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கும்படிக்கும், தேவ வார்த்தைகளின் தியானத்தினால் மனதை எப் போதும் நிறைத்து காத்துக் கொள்வோமாக.

ஜெபம்:

ஜெயங்கொடுக்கும் தேவனே, என்னுடைய போராயுதங்கள் மாம்சபெலன் அல்ல என்பதை நான் உணர்ந்து, உம்முடைய வார்த்தையின்படி நான் ஜெயங்கொள்கின்றவனாக மாற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8