புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 24, 2023)

வாழ்க்கை செழிப்பாக காட்சியளிக்கின்றது

யோவான் 15:2

கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.


திராட்சைத் தோட்டமொன்றின் முதலாளியானவன், தன் தோட்டதைப் பராமரிக்கும்படிக்கு சில ஊழியர்களை வேலைக்கமர்த்தி, அவர்கள் எப் படி தோட்டத்தை பாரமரிக்க வேண்டும் என்ற பயிற்சிகளையும், அறி வுரைகளையும் கொடுத்து, தூர தேசமொன்றிற்கு சென்றிருந்தான். சில காலத்திற்கு பின் அவன் திரும்பி வந்தபோது, தன் திராட்சைத் தோட் டத்தை பார்க்கும்படி சென்றிருந் தான். செடிகள் கிளைநறுக்கி சுத் தம்பண்ணப்படாததை கண்டு, தன் ஊழியர்களை அழைத்து அவர் களை விசாரித்தான். அவர்களின் கண்காணியானவன், முதலாளி யை பார்த்து: ஐயா, அதிகமான கொடிகள் பலன் கொடுக்கின் றது அத்துடன் செடிகள் யாவும் வளர்ந்து, கொடிகள் யாவும் மிகவும் செழிப்பாக காட்சியளிக்கின்றது. ஆதலால் ஏன் கிளைநறுக்க வேண்டும் என்று சிந்தித்து அதை செய் யாது போனோம் என்றான். அதைக் கேட்ட முதலாளியானவன் கோப மடைந்தவராய், மதியீனர்களைப் போல நடந்து கொண்டீர்களே. கனி கொடு க்கின்ற கொடிகள் அதிக பலனைக் கொடுக்கும்படி அதை கால த்திலே கிளைநறுக்கி சுத்தம் செய்யப்பட வேண்டும். கனிகொடாத பல னற்ற கொடிகளானது அறுத்துப்போடப்படல் வேண்டும் என்பதை உங்க ளுக்கு சொல்லிக் கொடுத்ததை சீக்கிரமாக மறந்து போய்விட்டீர்களா என்று கேட்டார். பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் யாவரும் திராட்சை செடியாகிய இயேசுவில் ஒட்டப்பட்ட கொடிகளைப் போல பலன் கொடு க்கின்றவர்களாக வாழ வேண்டும். ஒருவன் சபையில் கிரி யைகளை செய்கின்றான். தவறாமல் ஆராதனைகளுக்கு கலந்து கொள் கின்றான். அவனுடைய வாழ்க்கை அழகாக காட்சியளிக்கின்றது என்று நிர்விசாரிகளாக நாம் மாறிவிடக்கூடாது. தேவவார்த்தையின் ஆலோச னைகளின்படி, நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் குறித்த கால த்திலே கிளைநறுக்கி சுத்தம் செய்யப்படல் வேண்டும். பிதவாகிய தேவன் தாமே கிறிஸ்துவின் உபதேசத்தினாலே நம்மை சுத்திகரிக்கின் றார். எனவே வாழ்க்கையானது மற்றவர்களுடைய பார்வைக்கு செழிப் பாக இருப்பதனால், அங்கே பெரிதான பலன் உண்டாகும் என்பது பொரு ளல்ல. ஆவிக்குரிய வளர்ச்சியில் இருப்பது போதும் என்று விட்டுவி டாமல், அதினதின் காலத்திலே அதிக கனியை கொடுக்கும்படிக்கு, குறி த்த காலத்திலே நம் வாழ்க்கையானது, தேவ வார்த்தையின்படி சுத்தம் பண்ணப்படல் வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, நான் கனிகொடாத கொடியைப்போல மாறி விடாதபடிக்கு, உம்முடைய வார்த்தையின்படி எனது உள்ளானமனிதனானது நாளுக்கு நாள் புதிதாகும்படி என்னை வழிடநத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 13:23