புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 23, 2023)

கரிசனையுள்ளவர்கள் யார்?

1 தெசலோனிக்கேயர் 5:12

கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,


ஒரு கிராமத்திலுள்ள ஆரம்ப கல்வி பாடசாலையொன்றில் கல்வி கற்பித்து வந்த ஆசிரியர், தன்னிடம் கல்வி கற்கும் மாண மாணவிகளின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வந்தார். பல ஆண்டுகளுக்கு பின், அவரிடம் கல்வி கற்ற மாணவனொருவன் மிகவும் குறும்பு செய ல்களை செய்து வந்தான். அந்த ஆசிரியருமோ, இளைத்துப் போகாமல், அந்த மாணவனை நெறிப்படுத் திக் கொண்டே வந்தார். அவன் அந்த பாட சாலையில் கல்வி கற்ற 8 வருடங்களும், அந்த ஆசீரியரை மிகவும் வெறு த்து வந்தான். எட்டாம் ஆண்டில் அவன் பரீட்சைகளை சிறப்பாகச் செய்ததால், பட்டணத்திற்கு சென்று மேற்படிப்பை தொடர்ந்தான். பல ஆண்டுகளாக பட்டணத்திலே இருந்து, பட்டப்படிப்புக் களை முடித்து, பெரிய உத்தியோமொன்றிலே அமர்ந்து கொண்டான். ஒரு நாள் தன் பிள்ளைகளில் ஒருவன் தொடர்ச்சியாக குறும்புகளை செய்கின்றான் அவன் இப்படியே தொடர்ந்தால், அவனை நெறிப் படுத்தும்படி, விசேஷபாடசாலைக்கு அனுப்புவோம் என்று பாடசாலையிலிருந்து எச்சரிப்பின் அறிக்கை வந்தது. அன்றிரவு அவன் படுக்கையிலிருக்கும் போது, தன்னுடைய ஆரம்ப கல்வியின் நாட்களை சிந்தித்துப் பார்த்தான். அவன் கண்களில் கண் ணீர் வந்தது. அடுத்த நாளே, தன் குடும்பத்தாரோடு, தான் பிறந்த கிராமத்திற்குச் சென்று, தனக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியரை தேடினான். அவரோ வயது சென்றவராய், நோய்வாய்ப்பட்டு படுக்கையிலே இருந்தார். அவர் அருகே சென்றதும், அவனால் தன் அழுகையை அடக்க முடியவில்லை. அவன் அந்த ஆசிரியரைப் பார்த்து: என் இளமைக் காலத்தின், என் பாதுகாப்பின் வேலியாக இருந்தவரே, உங்கள் நீடிய பொறுமைக்கும், கரிசணைக்கும் மிக்க நன்றி என்று அவன் தயவாய் கூறி னான். அவனுடைய முன்னேற்றத்தை அறிந்த அந்த ஆசிரியர், மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆம், பிரியமானவர்களே, உங்களைக் குறித்து கரிசணையுள்ள மூத்தவர்கள் உங்களை கடிந்து கொள்ளும் நாட்கள் உண்டு. அவர்கள் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்து பெரு மகிழ்சியடைவார்கள். இத்தகையவர்கள் உங்களை குட்டினாலும், பொறுமையோடு ஏற்றுக் கொள்வது உங்கள் வாழ்விற்கு நன்மையைத் தரும். எனவே, கர்த்தருக்குள் உங்களை விசாரிக்கின் றவர்களை கனத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் புத்திமதிகளை மனதிலே பதித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக தந்தையே, எங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, விசாரணைசெய்கிறவர்களாயிருந்து,புத்திசொல்லுகிறவர்களை நாங்கள் அன்போடு ஏற்றுக் கொள்ளும்படி தெளிந்த புத்தியை தந்து நடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:1-5