புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 22, 2023)

சிட்சைசெய்யாத மனிதர்கள்

சங்கீதம் 94:13

சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த பெற்றோர், மருத்துவ பரிசோதனைக்காக தங்கள் மகளானவளை சிறுவர்களுக்காக விசேஷித்த மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். பல பரிசோதனைகளை செய்து முடித்த பின்பு, அந்த மருத்துவரானவர், தன்னுடைய ஆலோசனைகளை பெற்றோரிடம் கூறினார். உங்கள் மகளானவளுக்கு குறிப்பிட்ட நோயின் அறிகுறிகள் தெரிகின்றது. அவள் உண்ணும் உணவு வகைகளும், குடிக்கும் மென் பானங்களையும் குறித்து கவனமாக இருக்க வேண்டும். மேலும், அவளு டைய சில பழக்கவழக்கங்களை இப்போது மாற்றாவிட்டால், எதிர் காலத்திலே மனநி லையில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறினார். தகப்பனானவர் தன் மகளை அதிகமாக நேசித்து வந்தார். அது போல, சிறுமியும் தன் தகப்பனோடு மிகவும் பட் சமாக இருந்து வந்தாள். அதனால், அவள் மனதை நோகப் பண்ணக் கூடாது என்று தகப்பனானவர், தன் மனையிவிடம் கூறினார். அதற்கு தாயானவள்: தன் கணவனை நோக்கி: உங்களுடைய அன்பிலே சுய நலம் இருக்கின்றது. நீங்கள் மருத்துவர் கூறியவற்றை செய்தால், அவள் உங்களோடு பட்சமாக இருக்கமாட்டாள் என்று உண்மையை எவ் வளவு நாட்களுக்கு கூறாதிருப்பீர்கள்? அவள் செய்யும் தவறான காரியங் களை அவளுக்குத் தெரியப்படுத்தி, எப்போது அவளை நெறிப்படுத்தப் போகி ன்றீர்கள் என்று கூறினாள். பிரியமானவர்களே, குடும்பங்களில் மட்டு மல்ல, சில வேளைகளிலே சபைகளிலும் அந்த தந்தையாரைப் போன்ற மனிதர்கள் காணப்;படுகின்றார்கள். மேய்ப்பர்கள், மூப்பர்கள் மந்தைக ளில் சிலவற்றை நெறிப்படுத்தும் போது, வேறு சிலர் தங்கள் நற்பெய ரையும், நன்மதிப்பையும் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தவறுகளை நெறிப்படுத்துபவர்களை எதிர்த்துக் கொண்டு, தவறு கள் செய்கின்றவர்களை மனநோகப்படுத்தக்கூடாது, அவர்களை அன் போடு நடத்த வேண்டும், ஆதரவாக இருக்க வேண்டும் என்று தங்களது உரிமைககு குரல் கொடுக்கின்றவர்களாக காண்பித்துக் கொள் கின்றார்கள். இத்தகைய அன்பு முகஸ்துதியுள்ளதாக இருக்கின்றது. ஆம், உங்களை கடிந்து கொள்கின்றவர்கள் எல்லோரும் உங்கள் எதி ரிகளுமல்ல, உங்களை ஆதரித்து நடத்துகின்றவர்களெல்லோரும் உங் களது உண்மையான நன்மையைக் கருதி நடக்கின்றவர்களுமல்ல என் பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே, உங்களை தேவ வசனத்தி ன்படி சிட்சிக்கின்றவர்களை அற்பமாக எண்ணாதிருங்கள்.

ஜெபம்:

அன்பின் பரம தந்தையே, உம்முடைய ஆலோசனைகளை நான் தள்ளிவிடாமல், அவைகளை ஏற்று, எனது வழிகளை மாற்றிக் கொள்ள எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 7:5