புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 19, 2023)

உதவி செய்யும் ஆவியானவர்

ரோமர் 8:26

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த இளைஞர்கள் மத்தியிலே, சில தீய அடிமைத்தன பழக்கங்கள் அதிகரித்துக் கொண்டு வந்ததால், குறிப்பிட்ட தொண்டர் ஸ்தாபனமொன்று, மருத்துவ நிபுணர்களுடனும், சட்ட அமு லாக்கல் அதிகாரிகளுடனும் இணைந்து, அந்த ஊரிலுள்ள சனசமூக நிலையத்தில், இலவசமான இளைஞர் புனர்வாழ்வு சேவையை ஆரம் பித்தார்கள். அந்த சேவையிலே, அவர்கள், பாதிக்கப்பட்ட இளைஞருடைய மறுசீரமைப்புக்காக நடமுறை செயற்பாடுகளையும், பாதிக்கபடாத இளை ஞர்கள் மத்தியிலே போதைவஸ்து சம்மந்தமான அடிமைத்தனத்தைக் குறித்த விழிப்புணர்வை, கொண்டு வரும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கொடுக்க ஆயத்தமுள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால், அந்த ஊரிலுள்ள பெற்றோர்களில் ஒரு சிலரோ அந்த உதவியை பெற்றுக் கொள்ள மனதில்லாதவர்களாக இருந்தார்கள். தங்கள் பிள்ளைகள் சீர்கெட்டு அழிந்து போனாலும், அவர்களுடைய நிலைமை யாருக்கும் தெரியக்கூடாது. அது எங்களுக்கு அவமானத்தையும், குடும்ப கௌரவத்தை பாதிக்கும் என்று உதவியை தள்ளிவிட்டார்கள். பிரியமானவர்களே, இன்று சில தேவ பிள்ளைகளும் கசப்பு, எரிச்சல், வன்மம், பகை, பிரிவினை போன்ற பாவ அடிமைத்தனங்களிலே சிக்கி விடுதலையடைய முடியாமல் வாழ் கின்றார்கள். ஆவிக்குரிய நோய் கொண்ட அவர்கள் மனதிலே சமாதானம் இல்லாதிருந்தும், நாங்கள் நன்றாக இருக்கின்றோம் என்று கூறிக் கொள்கின்றார்கள். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நமக்கு போராட்டங்கள் உண்டு என்று வேதம் தெளிவாகக் கூறுகின்றது. அந்தப் போராட்டங்களிலே நாம் தனியாக விடப்படுவதில்லை. நம் முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்ப ட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியராகிய இயேசு நமக்கிருக்கிறார். நாம் தனித்துவிடப்படாதபடிக்கு, என்றென்றும் நம்மோடு இருக்கும்படிக்கு அவருடைய நாமத்தில் சத்திய ஆவியானவரை நமக்கு ஈவாக கொடுத்திருக்கின்றார். எனவே மனதிலே மறைந்திருக்கும் பெல வீனங்களை அறிக்கையிடுங்கள். ஆவியானவரின் துணையை நாடுங்கள். வேதம் கூறும் ஆலோசனைகளை கேளுங்கள். ஆவியாவனர் உங்கள் மேய்ப்பர் வழியாக கூறும் அறிவுரைகளை அசட்டை செய்யாமல் அதற்கு கீழ்படியுங்கள். தேவன்தாமே எல்லா மறைவான கட்டுகளிலும் இருந்து விடுதலை தந்து நடத்திச் செல்வார்.

ஜெபம்:

பெலவீன நேரங்களிலே பெலன் தரும் தேவனே, என்னுடைய பெலவீனங்களிலே நான் அழிந்து போகாமல், அவைகளை ஜெயங் கொள்ளும்படி என்னை நீர் உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:15-16

Category Tags: