புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 18, 2023)

தேவனுடைய பார்வையிலே நீதிமான் யார்?

மத்தேயு 7:3

நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த முதியவரொருவர், அவருடைய சிறிய வயதிலிருந்தே, சன்மார்க்க வழியில் நடந்து, ஊரார் மத்தியிலே நன்மதிப்பு பெற்றிருந்தார். அவருடைய வாழ்க்கையின் நடவடிக்கைகளைப் பார் த்து, இந்தக் காரியத்திலே அவர் தவறிவிட்டார் என்று சுட்டிக்காட்டுவதற்கு ஏதாவது குற்றத்தை கண்டுபிடிப்பது மிகவும் அரிதாகவே இருந்தது. ஒரு நாள், அவர் வழமைபோல கடைக்கு சென்று திரும்பி வரும்போது, கல் லொன்று தடக்கி, அவர் தெருவோரமாக விழுந்து விட்டார். அவருடைய கால் களிலே ஏற்பட்ட காயங்களினாலே, எழு ந்திருக்க முடியாமல், அவர் தெருவி லே அநாதரவாக கிடந்தார். அந்த வழி யாக வந்த அயலிலுள்ள உறவினனொ ருவன், அவரை தூக்கிக் கொண்டு செல் லும்படிக்கு அருகில் சென்றான். வெயில் கொடுமை ஒருபக்கதிலே, காயங்க ளோடு அரை மயக்கத்துடன் இருந்த அந்த முதியவர், தனக்கு உதவி செய்ய வந்த மனிதனானவனை நோக்கி: நீ மட்டும் என்னைத் தொடா தே, உன்னிடத்தில் உதவியை பெறுவதைவிட நான் மரித்து போவது எனக்கு நலம் என்று அகங்காரத்தோடு கூறினார். அந்த முதியவர் தன்னை ஊருக்கு உத்தமனாக காட்டிக் கொண்ட போதும், தன்னுடைய உறவினன் பல ஆண்டுகளுக்கு முன் செய்த துரோகத்தை தன் மன திலே வைத்து, அந்த உறவினனைக் குறித்த கசப்பை தன் இருதயத் திலே வளர்த்து காத்து கொண்டு வந்தார் என்பது அப்போது தெளிவா னது. நாமும் நம் இருதயத்திலே பொக்கிஷமாக மறைத்து வைத்து, வளர்த்து வரும் ஆகாத காரியங்கள்; நம்முடைய பெலவீன நாட்களிலே நம்மை மேற்கொண்டு விடும். அந்த முதியவரின் உறவினன் பல ஆண் டுகளுக்கு முன் ஒரு தவறு செய்தது உண்மை. ஆனால், சன்மார்க்கரான முதியவரோ, தன் உள்ளத்தில் கசப்பையும், வைராக்கியத்தையும், பெருமையையும் பல ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இந்த உலகத் திலே ஒரு நீதியுண்டு. இவை பல மனிதர்களால் ஏற்றுக்கொள்ளப் படலாம். ஆனால், நாமோ, இந்த உலகத்தின் நீதியின்படியல்ல, தேவ நீதியின்படி வாழும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றோம். மனிதர்களு டைய வெளியரங்கமான பாவங்களை குறித்து நியாயந்தீர்க்கும் சிலர், தங்கள் இருதயத்திலே இருளின் அதிகாரத்திற்குரிய சுபாவங்களை வளர்த்து வருகின்றார்கள். நாம் அப்படி இருக்கலாகாது. நாம் இயேசு வின் சாயலிலே வளர்ந்து பெருகின்றவர்களாக வாழ்வோமாக.

ஜெபம்:

இருதயத்தை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, மற்றவர்கள் எனக்கு செய்யும் துரோகத்தினிமித்தம் நான் என் இருதயத்தை, தீமை குடிகொள்ள இடங்ககொடாமல் இருக்க என்னை உணர்வுள்ளவனாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 2:1-6