புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 16, 2023)

எதற்காக அழைக்கப்பட்டீர்கள்?

லூக்கா 21:34

நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.


தங்கள் தந்தையாரின் சொத்துக்களை முறைப்படி அவனுடைய இரண்டு குமாரர்களும்; சுதந்தரித்துக் கொண்டார்கள். ஆண்டுகள் கடந்து சென்று தந்தையாரின் மறைவிற்கு பின்னர், இந்த இரு சகோதரர்கள் மத்தியிலே தங்கள் நிலங்களின் எல்லையை குறித்த தகராறு ஏற்பட்டுவிட்டது. அந்தப் பிரச்சனையை தங்களுக்கி டையே தீர்த்து வைக்க முடியாமல், எதிரெதிராக வழக்கு தாக்குதல் செய்தார்கள். இரண்டு பகுதியின ரும் தங்களுக்கென வழக்கறிஞ ர்களை தெரிந்து கொண்டு, அந்த வழக்கிலே வெல்லும்படி அதிக பணத்தையும் செலவு செய்து வந் தார்கள். ஒரு இரவிலே, அவர்கள் வாழ்ந்த ஊரைத் தாக்கிய பெரும் சூறாவளியானது அவர்கள் வீடுகளை யும், பண்ணையும் முற்றாக அழித்து, அவர்கள் நிலங்களுடைய எல் லைகளைக் கண்டு கொள்ள முடியாதபடிக்கு, பரந்த வெளிநிலங்களாக காணப்பட்டது. அந்த ஊராருடன், அவர்களும், ஒரு ஆலயத்தில் அகதி களாக தங்கியிருந்த போது, தங்கள் மதியீனமான வாழ்க்கையை இரு வரும் உணர்ந்து கொண்டார்கள். தந்தை விட்டுச் சென்ற ஆசீர்வாதங்க ளை தங்களுக்கு கண்ணியாக மாறியதையும், அது தமது நல்லிணக்க த்தை கெடு த்து, மனக்கசப்பை உண்டாக்கியதை கண்டு கொண்டார்கள். இதற்காகவா அவர்களுடைய தந்தையார் தன் குமாரர்களுக்கு சொத் துக்களை விட்டுச் சென்றார்? சற்று சிந்தனை செய்து பாருங்கள். அவர்க ளிடம் திரளான செல்வம் இருந்தும், தங்கள் மாம்சம் இச்சித்தத்தை தாங் கள் பெற வேண்டும் என்பதை ஒரே நோக்கமாக அவர்கள் கொண்டிருந் தார்கள். அதன் முடிவாக அழிவு சடிதியாய் வந்தது. பிரியமானவர்களே, நாமும் தேவ கிருபையினாலே, விலைமதிக்க முடியாத இரட்சிப்பை இல வசமாக பெற்றிருக்கின்றோம். அதன் வழியாக நமக்கு வைக்கப்பட்டிரு க்கின்ற நித்திய ஜீவனுக்கென்று அழைப்பையும் பெற்றவர் களாக, கர்த் தருடைய நாளை எதிர்பார்த்திருக்கின்றோம். கர்த்தருடைய நாளுக்கெ ன்று ஆயத்தமாக இருப்பவர்களுக்கு, அந்த நாள் நித்திய மகிழ்ச்சியின் நாளாக இருக்கும். ஆனால், ஆயத்மற்றவர்களாக தங்கள் சுயஇச்சகை களை நிறைவேற்றுகின்றவர்களுக்கு அந்நாள் பெருங்கண்ணியைப் போல சடுதியாய்; வரும். மனந்திரும்பவோ, மனம்மாறவோ நேரம் இருக்காது. எனவே அநித்தியமானவைகளை நோக்காமல், நித்தியமானவைகளை பற் றிக் கொண்டு, கர்த்தருடைய நாளுக்காக ஆயத்தப்படுவோமாக.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கென்று என்னை அழைத்த தேவனே, கிருபையின் நாட்களை வீணடித்து, மனக்கசப்பை வளர்த்துக் கொள்ளாமல், உம்முடைய நாளுக்கென்று ஆயத்தப்பட எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 4:7-8