தியானம் (பங்குனி 15, 2023)
உன் எதிரியின் ஆத்துமா அழிய வேண்டுமா?
சங்கீதம் 103:10
நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
ஒரு ஊரிலே துன்மார்க்கமான வாழ்க்கை வாழ்ந்து வந்த மனிதனொருவன், அயலிலே வசித்து வந்த தேவபக்தியுள்ள அயலவனொருவனுக்கு காரணமேதுமின்றி பெருந்தீங்கை செய்துவிட்டான். மனவேதனையடைந்த அந்த தேவ பக்தியுள்ள அயலவனானவனோ, 'பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லு கிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.' என்ற வார்த்தைக்கமைய தேவன் அந்த பொல் லாத வழியில் வாழும் மனிதனுக்கு அவனுடைய பொல்லாத வழிகளுக் குதக்கதான பேரழிவை கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தான். ஆனால், அந்த பொல்லாத மனிதனானவனை ஒரு இக்க ட்டான சூழ்நிலையிலே ஆண்டவர் இயேசு சந்தித்தார். தன் அழுக்கான வாழ்க்கையை உணர்ந்து, மனமாற்றமடைந்து, அவன் ஆண்டவர் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான். அவன் மனதிலே பெரிதான சந்தோஷம். தான் தீங்கு செய்த மனிதர்களைக் கண்டு அவன் மன்னிப்பை கேட்டு ஒப்புரவாகிக் கொண்டான். அந்த தேவ பக்தியுள்ள அயலவனானவனிடமும் மன்னிப்பு கேட்பதற்காக சென்றிருந்தான். ஆனால், அந்த அயலவனானவனோ, தன் மனதை கடினப்படுத்திக் கொண்டு, தன் மேய்ப்பனானவரிடம் சென்று, அவரை நோக்கி: எனக்கு தீங்கு செய்த பொல்லாத மனிதனுக்கு தண்டனையில்லையா? இது நியாயமா? என்னை எவ்வளவாய் துன்பப்படுத்தினான்? என்று கசந்து கொண்டான். அந்த மேய்பரானவர் அவனை நோக்கி: மகனே, நீ இரட்சிப்படைந்த நாளை நினைத்துப்பார். அதன் பின்னரும் நீ தேவனுக்கு விரோதமாக செய்த பாவங்களை எண்ணிப்பார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். நானும் இயேசுவை அறிய முன்பு ஒரு துஷ்டனாக நாட்களை கழித்து வந்தேன். நாம் தேவனுக்குச் சத் துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவ ருடனே ஒப்புரவாக்கப்பட்டோமல்லவா? மீட்பர் இயேசு உனக்காகவும், எனக்காகவும் மட்டுமா மரித்தார்? அவர் மனித குலத்தின் பாவங்களனை த்தையும் தம்மேல் சுமந்து கொண்டார். உன்னுடைய பகைஞனாயி ருந்தவனும் தேவ ராஜ்யத்தில் சேர்ந்து கொண்டான் என்று தேவனுக்கு நன்றி செலுத்து என்று அவர் அறிவுரை கூறினார்.
ஜெபம்:
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கிய பிதாவே, உமக்கு நன்றி அப்பா. மனக்கசப்பை என்னைவிட்டு அகற்றிவிடுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 3:16