புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 12, 2023)

உலகத்தை இரட்சிக்கவந்தேன்

யோவான் 12:47

நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.


யோவான்ஸ்நானன் சிரைச்சேதம் செய்யப்பட்டான் என்ற சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள். இயேசு அதைக் கேட்டு அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜன ங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவ ரிடத்திற்குப் போனார்கள். இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்க ளில் வியாதியஸ்தர்களாயிருந்தவர் களைச் சொஸ்தமாக்கினார். பிரிய மான சகோதர சகோதரிகளே, தேவ தூதை அறிவிக்க வந்த யோவான் ஸ்நானக்கு அநியாயம் செய்தார்கள். அநியாயம் செய்தவர் களுக்கு உட னடியாக தண்டனை வழங்குவதற்கு ஆண்டவர் இயேசுவுக்கு முடியாத காரியமா? இல்லை, ஆண்டவர் இயே சுவால் ஆகாதது ஒன்றுமில்லை. ஆனாலும், அவரோ, தாம் இந்த பூமி க்கு வந்த பிதாவின் பிரதான நோக்கம் தன்னில் நிறைவேறும்படி ஏரோதை நியாயந்தீர்க்கவில்லை. ஏரோதை மட்டுமல்ல, ஒருவன் என் வார் த்தைக ளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்ப தில்லை. நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாத வனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது. நான் சொன்ன வசனமே அவ னைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்று இயேசு கூறியிருக்கின்றார். எனவே உலகத்திலே அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது என் பதை நாம் தினமும் கேள்விப்படுகின்றோம் அத்துடன் சிலவற்றை நேரில் காண்கின்றோம். சிலவேளைகளிலே அறிந்தோ அறியாமலோ அவற்றுள் நாமும் பங்காளிகளாகவும் மாறிவிடுகின்றோம். இவை யாவற்றின் மத்தி யிலும், தேவன் முன்குறித்த காலத்திற்கு முன் யாதொன்றைக் குறித்தும் தீர்ப்புச் செய்யாமல், தேவ னுடைய சித்தம் உங்களில் நிறைவேற இட ங்கொடுங்கள். இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற் கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய் துவந்த சகல அவபக்தியான கிரியைக ளினிமித்தமும், தமக்கு விரோ தமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவ ற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறி வித்தான் என்று வேதத்திலே வாசிக்கின்றோம் (யூதா 1:14-15). எனவே நீடியபொறுமையுள்ளவர்களாக தேவனுடைய இரட்சிப்பு உங்களில் நிறை வேற இடங்கொடுங்கள்.

ஜெபம்:

இருளில் மறைந்திருக்கிறவைகளை, இருதயங்களின் யோசனைகளையும் அறிந்த தேவனே, நீர் அவைகளை வெளிப்படுத்தும் நாள்வரைக்கும், உம்முடைய சித்தத்தை நான் செய்ய எனக்கு பெலன் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - 1 கொரி 4:5