புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 11, 2023)

தேவனுடைய பிரதானமான நோக்கம்

மத்தேயு 3:2

மனந்திரும்புங்கள், பரலோகராஜ் யம் சமீபித்திருக்கிறது.


ஆண்டவராகிய இயேசுவுக்கு வழியை ஆயத்தம்பண்ண வந்த தேவ னுடைய மனுஷனுமாகிய யோவன்ஸ்நானன், நீதியும் பரிசுத்தமுள்ளவனு மாக இருந்தான். அக்காலத்திலே இருந்த, ஏரோதுராஜா தன் சகோதரனா கிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டபோது, யோவான்ஸ்நானன் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொ ன்னதினிமித்தம், ஏரோது தனது சேவகரை அனுப்பி, யோவா னைப் பிடித்துக் கட்டிக் காவ லில் வைத்திருந்தான். ஏரோதியாளும் யோவன்ஸநானனுக்கு சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந் தாள்;. சமயம் வாய்தபோது அவனை சிரைசேதம் செய்வித்தாள். தேவனானவர், தம் முடைய பிரதானமான நோக்கம் மனிதர்களில் நிறைவேறும்படிக்கு, தம் முடைய தாசர்களை அனுப்புகின்றார். ஒருவரும் கெட்டுப்போகாமல் நித் திய ஜீவனை அடையும்படிக்கும், மனிதர்கள் மனந்திரும்பும்படிக்கு, தம் முடைய தூதர் களை அனுப்புகின்றார். ஒருவன் தேவனுடைய தீர்க்க தரிசியாக இருந்தால், தேவன் தன் வார்த்தைகளை அவன்; வாயில் அருளுகின்றார். தேவனுடைய தீர்க்கதரிசியானவன், தேவன் கற்பித்தப டியே, ஒன்றையும் அதனோடு சேர்க்காமலும், ஒன்றுறையும் அதிலிரு ந்து எடுத்துப் போடாமலும், தேவன் கற்பிப்பதையெல்லாம் உள்ளபடி அதிகாரிகளுக்கும், ஜனங்களுக்கும் கூறவேண்டும். அவருடைய தூதை கொண்டு செல்கின்றவர்களும், தேவனானவர் மனதுருக்கமுள்ளவர் என் பதை நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றார்கள். தேவனுடைய பிரத்தி யேகமான அழைப்பைப் பெற்ற யோவாஸ்நானனானவனும், தேவ தூதை அதிகாரிகளுக்கும், மதத்தலைவர்களுக்கும், ஜனங்களுக்கும், ராஜாவி ற்கும் உரைத்தான். அவர்களுடைய அவல நிலையை கண்டித்து, அவர் கள் மனதிரும்புதற்கு என்ன செய்ய வேண்டும் என்னபதை விளக்கிக் கூறி. தேவனுடைய ராஜ்யத்திற்குள் ஜனங்களை வழிநடத்தினான். சிலர் அவனுடைய வார்த்தையைக் கேட்டு, மனதிலே குத்துண்டவர்களாக, தங் களைத் தாழ்த்தி மனந்திரும்பினார்கள். ஆனால், ஏரோது மனந்திரும்ப மனதில்லாமல், அவனை கொலை செய்தான். பிரியமானவர்களே, மற் றவர்களுடைய குற்றங்களை சுட்டிக்காட்ட நீங்கள் அழைக் கப்பட்டி ருந்தாலும், தேவனுடைய பிரதானமான நோக்கத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அந்த சிந்தையைத் தரித்தவர்களாக, நஷ;டம் ஏற்பட்டாலும், தேவ நீதி நிறைவேற இடங்கொடுங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கின்றவர்களுக்கு வெளிச்சம் தரவும், அவர்களை சமாதானத்தின் வழியிலே நடத்தவும் நான் தேவ நற்செய்தியை அறிவிக்க என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 1:68-80

Category Tags: