புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 10, 2023)

கிருபைபொருந்தினவராயிருங்கள்

சங்கீதம் 89:14

கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.


தேவனுடைய ராஜ்யத்திலே அநீதிக்கும் அநியாயத்திற்கும் இடமில்லை. நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரமாயிருக்கின்றது. யோவான்ஸநானன் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயா விலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று. மனந்திரு ம்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். அவருடைய வார்த் தையை விசுவாசித்து ஏற்றுக் கொண்ட அநியாயக்காரர், பறிகாரர், பாவிகள் தங் கள் வழிகளை விட்டுவிலகி, தேவ நீதியை பின்பற்றினார்கள். ஆனால், தேவ நீதியை நடப்பிப்பதற்கு எதிராக நின்ற சிறப்பு குடிமக்களாகிய பரிசேயர், சதுசேயர், மதத்தலைவர்களில் பலரை ஆண்டவராகிய இயேசு தாமே வெளியரங்கமாக கண்டித்துப் பேசி, அவர்களுடைய வழிகளை எதிர்த்து நின்றார். மத்தேயு 23ம் அதிகாரத்திலே அதை நாம் வாசிக்கலாம். அவர் நடந்து கொண்டது போல நாமும் நடந்து கொள்ளலாமா? அவர் பேசியது போல நாமும் பேசலாமா? அவர் நடந்து கொண்டது போல நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே நம்முடைய ஆண்டவராகிய இயேசு விரும்புகின்றார். அவர் சத்தியத்தை சத்தியமாக பேசினார். பாவங்களை சுட்டிக்காட்டினார். ஆனாலும், அவர்களுடைய பாவங்களையெல்லாம் தம்மேல் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்காகவும் தம்மை ஜீவபலியாக ஒப்புக் கொடுத்தார். மீட்பரா கிய இயேசு, சிலுவையிலே மரிக்கும் தருவாயிலும், பிதாவே, இவர்கள் அறியாமல் செய்கின்றார்கள் இவர்களை மன்னியும் என்று பரிந்து பேசினார். இதன் வழியாக அவர் பாவிகளும், துரோகிகளும், துன்மார் கரும், அழிந்து போகாமல் நித்திய ஜீவனை அடைந்து கொள்ள வேண் டும் என்று தம்முடைய அன்பை வெளிக்காட்டினார். அவர் அன்புடன் சத்தியத்தைப் பேசினார். நாமும் மற்றவர்களை கடிந்து கொள்ளும் போது, நம்முடைய மனநிலை ஆண்டவர் இயேசுவைப் போல மாற வேண்டும். நம்முடைய கோபத்தையும், எரிச்சலையும் நிறைவேற்ற மற்றவர்களை கடிந்து கொள்ளாமல், அவர்கள் தேவனுடைய வழியை பின்பற்ற வேண்டும் என்ற உண்மையான அன்புடன் அவர்களை சத்தியத்திற்குள் நடத்த வேண்டும். மற்றவர்களுடைய நன்மைக்காக, கிறிஸ்துவைப் போல நஷ்டத்தை நாம் ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும். அவர் நீதியும் நியாயமுமுள்ளவராக இருந்தும், யாவர்மேலும் தம்முடைய கிருபையைப் பொழிந்து தம்முடைய வாக்குத்தத்தங் களை நிறைவேற்ற உண்மையுள்ளவராக இருக்கின்றார்.

ஜெபம்:

கிருபையும் நீதியுமுள்ள தேவனேஇ நான் நீதியை பேசும் போதுஇ தம்மைப் பலியாக சிலுவையிலே ஒப்புக் கொடுத்த ஆண்டவர் இயேசு வைப் போல கிருபை பொருந்தினவனாக இருக்க என்னை மாற்றுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 116:5