புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 09, 2023)

நீதிக்காக பிரயாசப்படுங்கள்

மத்தேயு 5:10

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.


அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது தவறா? சபையிலே சங்கத்திலே அநி யாயங்கள் ஏற்படும்போது மௌனமாக இருப்பது சரியாகுமா? என்று ஒரு வாலிபனானவன் தன் மேய்ப்பரிடம் கேட்டுக் கொண்டான். அதற்கு அந்த மேய்ப்பரானவர்: அநீதியையும் அநியாயத்தையும் காணும் போது, நீ ஒருபோதும் பாராமுகமாக மௌனமாக இருக்கக்கூடாது. நீ அவைகளை எதிர்த்துக் போராட வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஆனால், நம்முடைய போராட்டம் எப்படிப்பட்டது என்றும், இதற்கு நாம் உபயோகிக்கும் போரா யுதங்கள் இன்னதென்பதையும் குறி த்து மிகவும் தெளிவாக வகையறு த்துக் கூறுகின்றது. உன் அயலிலே வாழும் மனிதனானவனொருவன், மதுபான வெறிகொண்டு, தெருவின் நடுச் சந்தியிலே நின்று, கையிலே கத்தியை வைத்துக் கொண்டு, கல கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் நீ என்ன செய்வது நீதியாக இரு க்கும் என்று அந்த வாலிபனானவனைக் கேட்டார். பொலிசாருக்கு அழை ப்பு கொடுப்பேன் என்று தாமதமின்றி அவன் பதில் கூறினான். அந்த பொலிசார் நீ நினைத்தபடி சரியான நடவடிக்கையை எடுக்காவிட்டால் என் செய்வாய் என்று அந்த மேய்ப்பனானவர் கேட்டார். அதற்கு அந்த வாலிபனானவன், அவர்களை பார்த்துக் கொள்வதற்கும் அதிகாரங்கள் நியமிக்கப்பட்டடிருக்கின்றது என்று கூறினான். ஆம், மகனே, அந்த அதி காரங்களும் ஒருவேளை தவறினாலும், மேலான அதிகாரமுள்ளவரா கிய தேவனாகிய கர்த்தர் யாவற்றையும் அறிந்திருக்கின்றார். அவரு டைய நீதிக்கு ஒருவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. அதுபோலவே சபையிலும் தேவநீதி நிறைவேற இடங்கொடு. நீயோ, மனத்தாழ்மை யை அணிந்து கொண்டு, கீழ்படிவுள்ளவனாக இருந்து தேவனுடைய காரியங்களை கற்றுக் கொண்டு, உன்னைக் குறித்ததான காலம் நிறை வேறும்வரை அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருப்பதே தேவ நீதியாக இருக்கின்றது என்றார். (1 பேதுரு 5:5-7). பிரியமானவ ர்களே நம்மைக் குறித்து பிதாவினுடைய சித்தமானது நம்மில் நிறை வேற நாம் இடங்கொடுப்தே தேவ நீதியாக இருக்கின்றது. தேவ நீதியை நிறை வேற்றும் பாதையிலே துன்பங்களை சகித்துக் கொள்ள வேண்டும். அப் படி நாம் செய்யும் போது நாம் பாக்கியவான்களாக இருப்போம். மனந் திரும்பாமல், அநியாயத்திலே நிலைநிற்கின்றவன் அதற்குரிய தண்ட னையை நிச்சயமாக அடைவான்.

ஜெபம்:

நீதியின் தேவனே, என்னுடைய சுய அறிவின்படி அநீதிக்கு எதிர்த்து நிற்காமல், உம்முடைய வார்த்தையின்படி தேவ நீதி என்னில் நிறைவேற நான் இடங்கொடுக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 6:13