தியானம் (பங்குனி 07, 2023)
தேவனுடைய வழிகள் அதிசயமானவைகள்
பிரசங்கி 11:5
எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்
மாலை வேளையிலே, முற்றத்திலே ஓடி விளையாடும் தன்னுடைய ஐந்து பிள்ளைகளை பார்த்துக் கொண்டு, வீட்டும் தோட்டத்திலே சில வேலைகளை செய்து கொண்டிருந்த ஒரு தகப்பனானவர், தன் பிள்ளை களிலொருவன், தூஷணமான வார்த்தைப் பிரயோகம் செய்ததை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார். இவனும் என்னுடைய பிள்ளைகளி லொருவனல்லவா? நாங்கள் வீட்டிலே ஒருபோதும் உபயோகிக்காத ஆகாத அந்த வார்த்தையை எங்கே கற்றுக் கொண்டான் என்று மனவே தனையடைந்தார். அவனை கூப்பிட்டு, கண்டித்து, இந்த கிழமை முழு வதும் உனக்கு விளையாட்டு இல்லை. தோட்டத்திலே இருக்கின்ற இந்த சின்ன வேலைகளை வந்து செய் என்று கட்டளை கொடுத்தார். அவனு டைய சகோதரரி லொருவன், அவனை மன்னித்து விட்டுவிடுங்கள். அவனை ஏன் இப்படியாக எங்ளைவிட்டு தள்ளி விடுகின்றீர்கள் என்று தகப்பனிடம் கெஞ்சிக் கேட்டான். ஆனால், தன் பிள் ளைகளை உண்மையாக நேசித்து வந்த தகப்பனானவர், குற்றம் செய்த அந்த பிள்ளையானவன், சில நாட்கள் இப்படியாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து. தோட்டத்திலே வேலை செய்யும் போது, அவ னோடு அதிக நேரத்தை செலவழித்தார். அவனுக்கு புத்தியை தெளிவிக்கும் பல காரியங்களை அனுவபங்கள் வழியாக கற்பி த்துக் கொடுத்தார். பிரியமானவர்களே, சில வேளைகளிலே நமக்கு அன் பானவர்கள், குடும்பத்தைவிட்டு, சபையைவிட்டு, ஊரைவிட்டு சில காலம் விலக்கப்படுகின்றார்கள். அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு நீதி யாகவும், வேறுசில அநீதியாகவும் தோன்றலாம். அவைகளினாலே, உங் கள் மத்தியிலே இன்னும் அதிக குழப்பங்களை ஏற்படுத்தி விடாதிருங்கள். அன்பு மிகுந்த ஆண்டவர் இயேசுவானவர், பல மனிதர்களை, பற்பல இடங்களிலே சந்தித்ததை நாம் அனுபவ சாட்சி வழியாக கேட்டி ருக்கின்றோம். கடும் நோயினால் வாதிக்கப்பட்ட சிலரை வைத்திய சாலையிலும், கடும் தண்டனையை பெற்ற சமுகத்தைவிட்டு அகற்ற ப்பட்டவர்களை சிறைச்சாலையிலும், பராமரிப்பு நிலையங்களிலும், தங்க இடமின்றி தெருத்தெருவாக அலையும் சிலரை தெருவிலும் சந் தித்தார். அவர்களுடைய இருதயங்கள் தொடப்பட்டு, மனக்கண்கள் திற க்கப்பட்டு, தங்களை படைத்த தேவனாகிய கர்த்தர் யார் என்பதை அவ ர்கள் அறிந்து கொண்டார்கள். நம்முடைய தேவனனுடைய வழிகள் அதிசயமானவைகள். அவருடைய சித்தம் நிறைவேற இடங் கொடுங்கள்.
ஜெபம்:
உங்கள் வழிகள் என் வழிகள் அல்லவென்று கூறிய தேவானாகிய கர்த்தாவே, உம்முடைய வழிகளுக்கு நான் எதிர்த்து நிற்காதப டிக்கு, பொறுமையுள்ளனாக உம்மை வார்த்தையிலே நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ஏசாயா 55:8-9