தியானம் (பங்குனி 06, 2023)
மற்றவர்களும் இரட்சிக்கப்பட வேண்டும்
எபேசியர் 2:8
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சி க்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;
ஐயா, போதகர் அவர்களே, முற்காலங்களிலே நானும் என் நண்பர்க ளோடும் உறவுகளோடும் சேர்ந்து அவர்களைப் போல உணர்வற்ற வனாக அறியாமையிலே வாழ்ந்து வந்தேன். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் என்னில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பி னாலே, அக்கிரமங்களில் மரித்தவர்கனாயிருந்த என்னை கிறிஸ்துவுட னேகூட உயிர்ப்பித்தார்;. அவரு டைய கிருபையினாலே இரட்சிப்படைந் தேன். இப்போது நான் எப்படி என் பழைய நண்பர்களையும், உறவி னர் களையும் மறந்து போவது. அவர் களுக்கும் இரட்சிப்பின் நற்செய்தியை நான் அறிவிக்க வேண்டுமல்லவா என்று தன் பழைய நண்பர்களோடும் உறவுகளோடும் போக்கும் வரத்துமாக இருந்த ஒரு மனிதனானவன் தன் போதகரிடம் கூறினான். போதகர் அவனை நோக்கி: மகனே, நீ கூறிய தில் சத்தியம் இருக்கின்றது. நாம் பெற்ற இரட்சிப்பை நம்முடைய குடும் பங்கள், உறவுகள், நண்பர்கள் யாவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்கத்தான் வேண்டும். அவர்களுக்கு நற் செய்தி அறிவிக்கப்பட வேண்டும். அவர்களுடை கடினமான உள்ளம் உடைக்கப்பட வேண்டும் என்பதற்காய் நாம் ஊக்கமாக ஜெபிக்க வேண் டும். இவையொன்றிலும் வேற்றுமையான கருத்து இல்லை. ஆனால் சில காரியங்களை நீ கவனமாக கேட்டுக் கொள். நீ உன் நண்பர்க ளையும், உறவுகளையும் நேசிப்பதைவிட, ஆண்டவராகிய இயேசு அவ ர்களை அதிமாக நேசிக்கின்றார். அவர்களுடைய நிலைமையை அவர் ஒருவரே நன்றாக அறிந்திருக்கின்றார். அவர் யாரை? எப்போது? எங்கே அனுப்ப வேண்டும் என்பதில் என்னையும் உன்மையும்விட அதிக கரிச ணையுள்ளவராக இருக்கி ன்றார் என்பதையும் இரட்சிப்பு தேவனுடைய கிருபையினாலே உண்டாகின்றதென்பதையம் நீ ஒருபோதும் மறந்து விடாதே. உன் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள். புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளை யும் பிறப்பிக்கும் இடங்களையும் ஐக்கியங்களையும் தவிர்த்துக் கொள். பெற்ற இரட்சிப்பை அசட்டை பண்ணாதே. ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கத்தை கெடுக்கும். நீ அவர்களின் இரட்சிப்புக்காக அவர்களோடு அதிக நேரத்தை செலவழிப்பதைவிட, அவர்களுக்காக, தேவ னோடு ஜெபத்திலே அதிக நேரத்தை செலவிடு அப்போது நீ புத்திமானாய் நடந்து கொள்வாய் என்று ஆலோசனை கூறினார்.
ஜெபம்:
இரட்சிப்பின் தேவனே, அற்பமான என்னை பரிசுத்த வாழ்வு வாழும்படி வேறுபிரித்ததற்காய் நன்றி. நான் எப்போதும் உம்முடைய சித்தம் செய்பவனாக வாழ எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 கொரி 15:33