தியானம் (பங்குனி 05, 2023)
அழைப்பை அறிந்து கொள்ளுங்கள்
ரோமர் 12:3
அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
ஒரு வீட்டிலே, யாவரும் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையிலே, மின் சார கசிவு காரணமாக, தீடிரென ஏற்பட்ட தீயானது, சீக்கிரமாக பற்றி யெரிய ஆரம்பித்தது. வீட்டிலே இருந்தவர்கள் யாவரும் தாமதமின்றி வெளியேறிக் கொண்டிருந்தார்கள். தீயணைப்பு படையினரும் தீவிரமாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். வயது சென்ற தன்னுடைய தந்தையார், இன்னும் வீட்டைவிட்டு வெளியறேவில்லை என்று அறிந்து கொண்ட வீட்டின் சொந்தக்காரன், மிக வும் பதற்றமடைந்து, என் தந்தையை எப்படியாவது நான் காப்பாற்றுவேன் என்று வீட்டிற்குள் செல்ல தீவிரித்த போது, தீயணைப்பு படையின் அதி காரி அவனை இடை நிறுத்தி, அவனை நோக்கி: நீ உள்ளே போகமுடியாது, தீ பல இடங்களுக்கு பரவி விட்ட தால், உனக்கு உயிராபத்து நேரி டலாம். நாங்களோ, இதற்கென பயிற்சி பெற்று, அதற்குரிய பாதுகாப்பான சீருடையகளை அணிந்திருக்கின்றோம். இது எங்களுடைய அழைப்பு. நீ இங்கே உன் மனைவி பிள்ளைகளுடன் நின்றுகொள், எங்களுடைய வீரர்கள் உள்ளே சென்று, உன் தந்தையை காப்பாற்றுவார்கள் என்று கூறினார். பிரியமானவர்களே, தன் தந்தைக்கு உயிராபத்து ஏற்படுமோ என்ற கவலை மகனானவனை வாட்டியது. ஆனால் அந்த மகனானவனைவிட தீயிலிருந்து உயிரை பாதுகாப்பதற்காக பயிற்சி பெற்றவர்கள் இருக்கின்றார்கள். அதுபோலவே, இந்த உலகத்திலே வாழும் நாம், நாம் பெற்ற மீட்பை நம் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் யாவ ரும் பெறவேண்டும் என்னும் பாரம் நம் மனதிலே உண்டாகின்றது. அந்த எண்ணம் நன்மையானது. ஆனால், சில வேளைகளிலே அவர்கள் இருக்கும் பொல்லாப்பான சூழ்நிலைக்குள் செல்வதற்கு, நான் அழைப்பை பெற்றிருக்கின்றேனா என்று ஒவ்வொருவரும் தன்னைத் தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் அல்லது எந்த காரியத்திற்காகவும் நாம் பெற்ற இரட்சிப்பை நாம் பணயம் வைத்து செயற்படுவது மதியீனமான காரியம். நாம் செய்ய முடியாத காரியங்களை நடப்பிப்பதற்கும், நாம் செல்ல முடியாத இடங்களுக்கு சென்று வருவதற்கும், அந்த தீயணைப்பு படையினரைப் போல பிரத் தியேக அழைப்பைப பெற்ற தேவ ஊழியர்கள் இருக்கின்றார்கள். எனவே, நாம் தேவ சித்தம் நிறைவேறும்படி தேவனுடைய பாதத்திலே பொறுமையுடன் தரித்திருந்து ஜெபிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஜெபம்:
அன்பின் தேவனே, எனக்கு அருளப்பட்ட கிருபையின்படியே, என்னைக் குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், தெளிந்த எண்ணமுள்ளவனாயிருக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 பேதுரு 1:10