புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 04, 2023)

தனிமைப்படுத்தப்படும் நேரங்கள்

எபேசியர் 5:27

கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக


முன்னைய நூற்றாண்டுகளிலே நடந்த கொள்ளை நோயைப் பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஆனால் கடந்த ஆண்டுகளிலே கொள்ளை நோய் எப்படியாக ஆரம்பித்து, உலககெங்கும் பரவி, கொடிய தாக்கத்தை ஏற்படுத்தியதை நாம் யாவரும் இப்போது அனுபவரீதியாக அறிந்திருக்கின்றோம். பழைய ஏற்பாட்டுக் காலத்திலே, தொழுநோயானது மிகவும் கொடிய தொற்று நோயாக இருந்து வந்தது. அப்படிப்ப ட்ட நோயுளள்வர்களை, ஜனங்கள் இல்லாத இடத்தில் எப்படி தனிப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்த ஒழுங்கு முறைகளை லேவியராகமம் 13ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். நாம் அன்பு செய்கின்ற குடும்ப அங்கத்தினரை எப்படி தள்ளிவிடுவது என்பதை சிந்திக்கும் போது, அதை ஜூரனிப்பதற்கு கடின மாக இருக்கின்றதல்லவா? எனினும், கொள்ளை நோய் கிருமி தாக்கிய குடும்ப அங்கத்தினர்களை நாம் தனிமைப்படுத்த வேண்டிய அவசியத்தை அனுபவ ரீதியாக கற்றுக் கொண்டோம். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதால், அவர்களை முற்றிலும் கைவிட்டுவிட்டார்கள் என்பது பொருள் அல்ல. வைத்தியர்களும், தாதியர்களும், இன்னும் அநேக தொண்டர்களும் அவர்களுக்காக அயராது உழை த்தார்கள். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும், அன்பு மையப் பொருளாக இருக்கின்றது என்பதில் ஐயமேதுமில்லை. ஆனால், நம்முடைய உடன் சகோதரர்களிலும் சிலரை தனிமைப்படுத்துமாறு தேவ வார்த்தை வழியாக நமக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கின்றது. எடுத்துக் காட்டாக, வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண் டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு (தீத்து 3:10). இது நமக்கு கொடுக்கப்பட்ட தேவ ஆலோசனை. அதன்படி நம் ஆவி க்குரிய வாழ்க்கையை நாம் காத்துக் கொள்ள வேண்டும். ஆனால், புற ம்பே தள்ளிவிடப்பட்ட வேதப்புரட்டனாகிய அவனுடைய காரியம் என்ன? தேவன் அவனை முற்றிலும் கைவிட்டாரா? ஒருவரும் கெட்டுப்போகா மல் எல்லோரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, அவர் யாவர்மே லும் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். அப்படி மனந்திரும்புகின்றவனை தேவன் மறுபடியும் தம்மிடம் சேர்த்துக் கொள்ள தயவு பெருத்தவராகியருக்கின்றார். ஆனால், நாமோ தேவ எச்சரிப்பை ஏற்றுக் கொண்டு, மாசற்றவர்களாக தேவனுக்கு முன் நம்மை நிறுத்திக்கொள்வதற்கு நம் முடைய பரிசுத்த வாழ்வை காத்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழ நம்மை வேறு பிரித்த தேவனே, கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றவனுமாக நான் மாறும்படிக்கு என்னை நீர் நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:15