தியானம் (பங்குனி 02, 2023)
நண்பனின் கடிந்து கொள்ளுதல்
நீதிமொழிகள் 27:5
சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்
ரபீ, நீர் வாழ்க என்று சொல்லி, யூதாஸ்காரியோத் ஆண்டவர் இயேசுவை முத்தஞ்செய்தான். சற்று இந்த வசனத்தை சிந்தித்துப் பாருங்கள், யூதாஸ்: 'போதகரே' என்று மிகவும் கனத்தோடு இயேசுவை அழைத்தான். யூத மார்க்கத்தின் பிரதான ஆசாரியர், ஜனத்தின் மூப்பர்கள், போர் சேவகர் முன்னினையில், அவன் அஞ்சாமல் இயேசுவை போதகரே என்று அழைத்தான். ஏன் அவன் அஞ்சவில்லை? ஏனெனில் நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று பிரதான ஆசாரியர், ஜனத்தின் மூப்பர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். எனவே வஞ்சகமான முகஸ் துதியோடு, தன்னுடைய தீயசிந்தையை நிறைவேற்றும்படிக்கு இருதயத்திலே திருட்டுதனமுள்ள யூதாஸ் தன் எஜமானனாயிருந்த இயேசுவை முத்தம் செய்தான். இதை எதிரியின் முத்தம் என்று வேதாகமம் கூறுகின்றது. இன்னுமொரு சமயத்திலே ஆண்டவராகிய இயேசு தன் சிரே ஷ;ட சீஷனாகிய பேதுருவை மிகவும் கடுமையாக கடிந்து கொண்டார். ஏன் அப்படி கடிந்து கொண்டார்? தான் அன்பு செய்கின்ற சீஷனானவன், பிதாவினுடைய சித்தத்திற்கு எதிராக சிந்திக்கின்றான். அது அவனு க்கு நல்லதல்ல என்பதை கற்றுக்கொடுக்கும்படியாகவே அவர் அப்படி செய்தார் (மத்தேயு 16:23). இது ஒரு நண்பனுடைய கடிந்து கொள்ளு தல். ஆனாலும், அவனுடைய இக்கட்டான நேரத்திலே, பிசாசின் சோத னையிலே அவன் விழுந்து போகாதடிக்கு அவனுக்காக வேண்டுதல் செய்தார். (லூக்கா 22:31-32). இன்று சில விசுவாசிகளும்கூட எதிரியின் முகஸ்துதியையே விரும்புகின்றார்கள். அதாவது, அன்பாக இருக்க வேண்டும் என்ற போர்வையிலே தவறான வழியிலே தன் வாழ்க்கை அழித்துக் கொண்டிருப்பவர்களை அவர்களுடைய பாவத்திலே வாழும்படிக்கு விட்டுவிடுகின்றார்கள். ஆனால், அவர்கள் அழிந்து போகக்கூடாது என்ற எண்ணத்துடன், அவர்களுடைய தவறை சுட்டிக்காட்டும், மேய்ப்பர்கள், மூப்பர்களையோ அவர்கள் பகை;கின்றார்கள். பிரியமானவர்களே, நண்பனுடைய வார்த்தைகள் இருதயத்தைத்குத்தினாலும் அவை உண் மையானவைகள். நன்மைக்கேதுவானவைகள். ஆனால் சத்துரு இடும் முத்தம் வஞ்சனையுள்ளவைகள். (நீதி 27:6). பிதாவினிடத்திலே உண்மையான அரவணைப்பு உண்டு. அதனால் கடிந்து கொள்ளுதல் அவரி டம் இல்லை என்று எண்ணங் கொள்ளாதிருங்கள். உங்கள் நன்மை கருதி நீங்கள் கடிந்து கொள்ளப்படும் போது சோர்ந்து போகாதிருங்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரலோக பிதாவே, நான் முகஸ்துதி செய்யாமலும், முகஸ்துதியை விரும்பாமலும், உம்முடைய வார்த்தையின்படி என் வழிகளை மாற்றும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 15:14-15