புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 01, 2023)

பொறுமையோடு முன்னேறுங்கள்

2 தீமோத்தேயு 3:17

அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர் திருத்தலுக்கும், நீதியைப் படி ப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.


ஒரு ஊரிலே கணித பாடத்தை நன்றாக கற்றுக் கொடுக்கும் ஆசிரியரொ ருவர் இருந்தார். அவர் கற்பிக்கும் வகுப்பிலே தவறாமல் சென்று கற் றுக் கொண்ட மாணவர்களில் அநேகமானோர் விசேஷட சித்தி பெற்றிரு ந்தமை குறிப்பிடத்தக்கது. வகுப்பு நடக்கும் நேரங்களிலே, மாணவர் கள் தம் முழுக் கவனத்தையும் படி ப்பதில் செலுத்த வேண்டும் என்ப தில் அவர் மிகவும் உறுதியுள்ள வராக இருந்து வந்தார். குறிப்பிட்ட ஆண்டொன்றிலே, அவரிடம் கணி தம் படிக்க வந்த மாணவனொரு வன், படிப்பதில் கவனமற்றவனாக இருப்பதை கண்ட அந்த ஆசிரியர், அவனுடைய குறையை அதிகாரத்தோடு சுட்டிக்காட்டி, அவனை கடிந்து கொண்டார். அதனால், கோபமடைந்த அந்த மாணவன், இவரு டைய வகுப்புக்கு நான் இனி சமுகமளிக்கப் போவதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டான். அதை அறிந்து கொண்ட அவனுடைய நண்பனா னவன், அந்த மாணவனை நோக்கி: நண்பா, அந்த ஆசிரியர், உன்னைக் குறித்து கூறிய வார்த்தைகள் உண்மையுள்ளவைகள் என்பதையும், உன் எதிர்காலத்தின் நன்மைக்கு உகந்தது என்பதையும் நீ நன்றாக அறிந் திருக்கின்றாய். கற்றுக் கொடுப்பதிலே கடிந்து கொள்ளுதலும் உண்டு. எனவே நீ அவருடைய பேச்சின் தொனியினாலே சோர்ந்து போகாமல் அவருடைய நல் ஆலோசனை களை கேட்டு அதன்படி நடந்து கொள். முடிவு நன்மையாக இருக்கும். இதே ஆசிரியரிடம் கணித பாடத்தை கற்று, அதிவிசேஷட சித்தி பெற்ற என் மூத்த சகோதரன், இந்த ஆசிரி யரை குறித்து எனக்கு கூறிய அறிவுரை இதுவே என்றான். ஆம் பிரிய மானவர்களே, நீங்கள் உங்கள் மேய்ப்பர்களினதும், மூப்பர்களினதும், பேச்சுத் தொனியைக் குறித்து அதிகமாக நொந்து கொள்கின்றீர்களா? அல்லது சொல்லப்பட்ட வார்த்தைகளின் கருப்பொருளை கவனத்திற் கெடுத்துக் கொள்கின்றீர்களா? நம்முடைய ஆண்டவராகிய இயேசு அன்புடன் சத்தியத்தை பேசினார். சில இடங்களிலே தாம் அதிகமாக நேசித்த சீஷர்களையும் கடிந்து கொண்டார். தேவனுடைய வார்த்தை பேசப்படும்போது, சொல்லப்பட்ட காரியத்தில் உண்மையிருந்தால், அத ன்படி திருந்திக்; கொள்வதே உங்களுக்கு நலமானதாக இருக்கும். தய வான முகஸ்துதியைவிட, உண்மையான கடிந்து கொள் ளுதல் நல்லது. கடிந்து கொள்ளுதல் தற்போது கசப்பாக இருந்தாலும், முடிவிலே அவை இனிப்பானதான பலனையே கொடுக்கும்.

ஜெபம்:

அன்பின் பரம தந்தையே, வெளிப்படையான கடிந்து கொள்ளுதலை கேட்டு நான் சோர்ந்து பின்னிட்டு போகாதபடிக்கு, என்னைத் தாழ்த்தி என் வழிகளை சீர்செய்து கொள்ள உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தீத்து 2:15