புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 26, 2023)

தேவ சமாதானம் உங்களை காத்துக் கொள்ளும்

பிலிப்பியர் 4:9

அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.


எம்முடைய காலங்கள் நிறைவேறுகின்றது என்று ஒருசாராரும், இந்த உலகத்திலே இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டுமோ தெரி யாது என்று இன்னுமொரு சாராரும் கவலையடைவதுண்டு. நாளாந்தம் வாழ்க்கையிலே நாம் எதிர்நோக்கும் பாடுகள், கேட்கும் கசப்பான வார்த் தைகள், நம்பிக்கைத் துரோகங்கள், எதிர்நோக்கும் நன்றியற்ற தன்மை கள், வருத்தம் நோய்கள் போன்ற வைகளால் தேவ பிள்ளைகள் அதி கதிகமாய் நெருக்கப் படுகின்றார் கள். இவைகளின் மத்தியிலே ஒரு விசுவாசியானவன் எப்படி கவலை யடையாமல் இருக்க முடியும்? அதற்கு மேலாக எப்படியாக தேவ சமா தானத்தை இழந்து போகாமல் காத்துக் கொள்ளமுடியும் என்ற மனஅழுத்தம் ஏற்படுகின்றது. இப்ப டியானதொரு நிலையில் தம்முடைய பிள்ளைகள் எதிர்நோக்கும் பாடுகளையும் சவால்க ளையும் நம்மை அழைத்த தேவன் அறியாதிருக்கின்ராறோ? புhதிவழியில் மறந்து விடுவாரோ? ஆகாதவன் என்று தள்ளிவிடுவாரோ? புpரியமான சகோதர சகோதரிசகளே, தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல் லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல் லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? அவர் முடிவுபரியந்தம் நம்மை நடத்திச் செல்வார். வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர். நாம் செய்ய முடியாத காரியங்களை எம்மை செய்யும்படியாக ஆண்டவ ராகிய இயேசு நம்மிடத்தில் கேட்பதில்லை. நாம் தேவ சமாதானத்தை நம்முடைய சுயபெலத்தினால் காத்துக் கொள்ள முடியாது. ஆனால், நம் முடைய கவலைகளை தேவனிடம் தெரியப்படுத்துவதும், அவர் நமக்கு செய்த உபகாரங்களுக்கு ஸ்தோத்திரம் செய்வதும் மிகவும் இலகுவா னதும், யாவராலும் செய்யக் கூடியதாகவும் இருக்கின்றது. எனவே, நீங் கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண் டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங் கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். நீங்கள் தேவசமாதானத்தை காத்துக் கொள்ள தேவையில்லை, ஆனால் தேவசமாதானமானது உங்கள் சிந்தைகளையும், இருதயங்களையும் காத் துக் கொள்ளும். கற்றுக் கொடுக்கப்படும் வேத வார்த்தைகளையும், பரி சுத்தவான்களின் வாழ்க்கையில் பாதைகளையும் கவனித்து அவைகளி ன்படி நடந்தால், அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.

ஜெபம்:

என் நிலைமையை நன்றாக அறிந்த தேவனே, என் சுய அறிவிலே சாயாமல், உம்முடைய வார்த்தையின் வழியிலே நான் வாழ்ந்து இந்த உலகத்தை ஜெயிக்க நீர் எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 40:2