தியானம் (மாசி 25, 2023)
தேவ சமாதானத்தை காத்துக் கொள்வதெப்படி?
யோவான் 16:33
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக் கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
'ஆண்டவராகிய இயேசு கொடுத்த சமாதானத்தை இழந்து விடாதிருங்கள். உங்கள் இருதயங்களை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ளுங்கள்' என்னும் வார்த்தைகளை பொதுவாக எல்லா மேய்ப்பர்களும் சொல்வதை கேட்டிருப்பீர்கள். இவை சத்திய வேத வார்த்தைகள் எனவே நாம் அந்த வார்த்தைகளுக்கு தவறாமல் செவி கொடுக்க வேண்டும். ஏன் செவி கொடுக்க வேண்டும்? நாம் பெற்ற தேவ சமாதானம் ஒரு கூட்டில் அடைத்து வைத்திருக்கும் பறவை போன்றதா? கூட்டின் கதவை திறந்து விட்டால் அது தன் பாட்டிற்கு பறந்து போய்விடுமோ? அப்படியாக இல்லை. ஆண்டவர் இயேசு நமக்கு கொடுத்த சமாதானம் இந்த உலகத்திற்குரியதல்ல அந்த சமாதானம் பரலோத்திற்குரியது. பரலோத் திற்குரியவைகளை பூலோகத்திலுள்ளவைகளால் நாம் காத்துக் கொள்ள முடியாது. தேவ சமாதானத்தை பெற்ற சிலர், தங்கள் வழிகளை மாற்றிக் கொள்ளாமல், பழைய மனுஷனுக்குரிய மாம்ச இச்சைகளுக்கு மறுப டியும் தங்களை ஒப்புக் கொடுக்கும் போது, அவர்கள் பிசாசானவனு டைய வழிகளை தங்களுக்கென மறுபடியும் தெரிந்து கொள்கின்றார் கள். பிசாசானவன் கொல்லவும் அழிக்கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரான். வேறு சிலர், இந்த உலகத்தில் நன்மையானது என பெயர்பெற்றி ருக்கும் காரியங்களால் தேவ சமாதானத்தை அறிந்து கொள்ளவும், விபரி க்க வும், காத்துக் கொள்ளவும் முயல்கின்றார்கள். எடுத்துக் காட்டாக, கல்வியறிவு இல்லாத நாட்களிலே குடும்பத்திலே பெரும் சமாதானமும் ஒருமைப்பாடும் இருந்தது. நன்மை கருதி கல்வி கற்று முடிக்கின்ற போது, தங்கள் கல்வியை மேன்மைப்படுத்தி, அதினால் தேவனுடைய காரியங்களை வகையறுக்க முயல்கின்றார்கள். உலகமானது சுயஞான த்தினாலே தேவனுடையவைகளை அறிய முடியாது. ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலக த்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். தேவசமாதானமானது ஆண்டவர் இயேசுவின் சீஷர்களுக்கரியது. இயேசுவின் சீஷர்கள் யார்? இயேசுவின் சீஷர்கள் இயேசுவிலும், இயேசுவின் வார்த்தைகள் சீஷர்களிலும்; நிலை த்திருக்கின்றது. சத்திய ஆவியானவர்தாமே இவர்களோடு இருந்து சகல சத்திய வார்த்தைகளிலும் இவர்களை நடத்திச் செல்கின்றார். கடும் உபத்திவரத்திலும் தேவ சமாதானமானது இவர்களோடு இருக்கின்றது.
ஜெபம்:
ஆறுதலின் தேவனே, நான் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையும் உம்முடைய பாதத்தில் இறக்கி வைத்து, உம்முடைய நேரத்திற்காக காத்திருக்க நீர் எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:7-9