புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 24, 2023)

உள்ளத்திலும் இல்லத்திலும் சமாதானம்

யோவான் 14:27

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்


நாம் தேவனுடைய வீட்டாராக இருக்கின்றோம். வீட்டின் மூலைக் கல்லாக கன்மலையாகிய இயேசு கிறிஸ்து இருக்கின்றார். அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசு த்த ஆலயமாக எழும்புகிறது. ஆண்டவர் இயேசு வந்த இல்லத்திலே சமாதானம் உண்டு. அவை இந்த உலகத்தினால் உண்டான சமாதானம் அல்ல. அந்த நிறைவான சமாதானத்தை ஆண்டவராகிய இயேசு நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றார். நம் உள்ளத்தில் அந்த சமாதானம் இருக்குமாயின் அத ற்கு நம் இல்லமே சாட்சியாக இரு க்கும். அந்த இல்லத்திலே நாம் கூடும் சபையை குறித்த முறுமுறுப்பு இருக் காது, மாறாக, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைய வேண்டும் (எபே 4:12) என்ற ஊக்கமான ஜெபம் இருக்கும். அங்கே ஊழியர்களை குறித்த விமர்சனங்களில் நேரம் விரயமாக்கப்படு வதில்லை. மாறாக, மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களு க்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்திருப்பார்கள். (எபே 6:18). வேத வார்த்தைகளை குறித்த விவாதத்தினால் தங்கள் நாட்களை வீணடிக்காமல், கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிரு பையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளர்ந்து பெருகின்றவர்களாக காணப்படுவார்கள். (2 பேதுரு 18). பிரியமானவர்களே, சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங் களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களு க்குக் கொடுக்கிற தில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படா மலும் இருப்பதாக என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். இந்த உலகதினால் உண்டாகும் சமாதானம் நிலையற்றதும், குறைவு ள்ளதுமாக இருக்கின் றது. ஆனால் ஆண்டவர் இயேசுவின் சமாதானம் நித்தியமானதும், நிலையானதும், வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனால் உத்தரவாதம் கொடுக்கப்பட்டதுமாயிரு க்கின்றது. உலக ஞானமும், மாம்ச இச்சைகளும், பிசாசின் தந்திரங்க ளும் அந்த சமாதானத்திற்கு எதிராக செயற்படுகின்றதாயிருக்கின்றது. எனவே, உங்கள் இல்லங் களை தேவன் தாம் காரியங்களுக்கெதிரான விவாத மேடையாக மாறிப்போக இடங்கொடுக்காதிருங்கள். தேவனுடைய செய்ய நினைத்ததை நிறைவேற்றுவார், தடைகள் யாவும் நீக்கப்ப டும். நாம் அந்த தடைகளாக மாறிவிடக்கூடாது. ஆண்டவர் இயேசு தந்த சமாதானத்தை கருத்தோடு காத்துக் கொள்ளுங்கள். உள்ளத்திலும் இல்லத்திலும் தேவனை துதிக்கும் துதி எக்காலத்திலும் இருப்பதாக.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய வீட்டாரகவும், சொந்த பிள்ளைகளாவும் என்னைத் தெரிந்து கொண்டதற்காக நன்றி. நீர் தந்த சமாதானத்தை நான் காத்துக் கொள்ள கிருபை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:22

Category Tags: